டிஜிட்டல் மயமாகிறது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆவணப் பணிகள்

இலங்கையின் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி செயற்பாடுகளுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் அனுமதிகளை டிஜிட்டல் முறையில் முகாமை செய்வதற்காகப் புதிய ஒழுங்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த நவம்பர் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த ஒழுங்குமுறைகளின் மூலம் ‘தேசிய வர்த்தக ஒற்றை சாளர முறைமை’ (National Single Window for Trade) சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

‘One TRADE’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் முறைமையின் மூலம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கான விண்ணப்பங்கள், பிரகடனங்கள், ஆவணங்கள் மற்றும் பிற தகவல்களை இலத்திரனியல் முறையில் சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தொடர்புடைய அரச நிறுவனங்கள் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு உட்பட்டு அந்த ஆவணங்களைப் பரிசீலிக்கவும், அங்கீகரிக்கவும் அல்லது நிராகரிக்கவும் டிஜிட்டல் முறையிலேயே செயற்பட முடியும்.

‘GovTech Sri Lanka (Pvt) Ltd’ நிறுவனம் இந்த முறைமையின் அதிகாரப்பூர்வ செயற்பாட்டாளராகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இலங்கை சுங்கம், இலங்கை துறைமுக அதிகாரசபை, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை தேயிலைச் சபை உள்ளிட்ட ஆறு அரச நிறுவனங்கள் இதில் பங்காளர் தரப்புகளாக இணைக்கப்பட்டுள்ளன.

வர்த்தமானி அறிவித்தலின்படி தேயிலை, தென்னை மற்றும் தென்னை சார்ந்த பொருட்கள் உட்பட 124 ‘HS’ குறியீட்டு (HS Codes) எண்கள் இந்த புதிய ஒழுங்குமுறைகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், ‘One TRADE’ முறைமையின் மூலம் சமர்ப்பிக்கப்படும் இலத்திரனியல் ஆவணங்கள், அவை டிஜிட்டல் வடிவில் இருக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக அவற்றின் சட்டப்பூர்வ செல்லுபடியை நிராகரிக்க முடியாது என்றும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

dr

புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் போதைப்பொருளை நாடும் தொகையில் வீழ்ச்சி!

November 7, 2026

புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் போதைப்பொருள் பாவனைக்குத் திரும்புவதில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் புனர்வாழ்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைக்

c

கொழும்பு தேசிய வைத்தியசாலை மழை நீரில் மூழ்கியது

November 7, 2026

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியமைக்கு, கொழும்பு மாநகர சபையினால் நொரிஸ் கால்வாய்

esp

டிஜிட்டல் மயமாகிறது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆவணப் பணிகள்

November 7, 2026

இலங்கையின் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி செயற்பாடுகளுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் அனுமதிகளை டிஜிட்டல் முறையில் முகாமை செய்வதற்காகப்

jaf pri

சிறைச்சாலை நெருக்கடியை குறைக்க நியமிக்கப்பட்ட குழு கள விஜயம்

November 7, 2026

சிறைச்சாலைகளில் நிலவும் அதிகளவிலான கைதிகளின் நெருக்கடியைக் குறைப்பது தொடர்பாகக் கண்டறிவதற்காக, பொது நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய

9

“தமிழையும் பெரியார் பெயரையும் வைத்து ஊழல் செய்யும் தி.மு.க!” – முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!

November 6, 2026

சென்னை: பெரியார் அறிவுலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் திமுக மாபெரும் ஊழல் செய்துள்ளதாக முதலமைச்சர் விஜய் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது

ju

IGP க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதவான் உடனடியாக இடமாற்றம்

November 6, 2026

நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி பொலிஸ் மா அதிபருக்கு (IGP) எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்த

kad

குற்றச்செயல் கும்பலின் தலைவரான ’கைவாரு முத்து’ கட்டுநாயக்கவில் கைது

November 6, 2026

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலின் தலைவரான மனோஜ் முத்துகுமாரண பிரியதர்ஷன என்றழைக்கப்படும் ‘கைவாரு முத்து’ என்பவரை, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து

carney uuuuuuuuuuuuuuu

அமெரிக்காவைச் சார்ந்திருப்பக் குறைப்பதற்கு கனேடிய வரவு-செலவுத் திட்டம் உறுதிபூண்டுள்ளது

November 6, 2026

AFP செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது: நவம்பர் 5, 2026 – இர 23:32 கனடா வியாழக்கிழமை அன்று “பொருளாதார சுதந்திரத்தை”

canda budget

கனேடிய கூட்டாட்சி வரவு-செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய முன்மொழிவுகள்

November 6, 2026

பிரதமர் மார்க் கார்னியின் ஆட்சியில் இரண்டாவது முறையாக, கனேடிய அரசாங்கம் தனது முன்மொழியப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தை வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்

5YU33JN5JNO6HGR63EOL7VPBLE

கனடாவின் 2027-29 புதிய குடியேற்றத் திட்டத்தை வெளிப்படுத்தியது கூட்டாட்சி வரவுசெலவுத் திட்டம்

November 6, 2026

ஒட்டாவா (OTTAWA) — அரசாங்கத்தின் இற்றைப்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டம், நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்களின் சேர்க்கைக்கான பரந்த இலக்குகளைத் தக்கவைத்துக்கொள்வதோடு,

IMG_1224

யாழில் ஒரே வீட்டில் இருவர் சடலங்களாக மீட்பு!

November 6, 2026

யாழ்ப்பாணம், வேலணை – செட்டிக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சகோதரி மற்றும் சகோதரன் ஆகிய இருவரின் சடலங்கள் இன்றையதினம் (06)

IMG_1223

வடபகுதிக் கடற்பரப்பு சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது

November 6, 2026

அத்துமீறி நுழையும் சட்டவிரோத இந்திய மீனவர்களாலும், உள்ளூர் சட்டவிரோத கடற்றொழிலாளர்களாலும் வடபகுதிக் கடற்பரப்பு முழுவதும் சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், நேர்மையான