ர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஸ்டார்க் முன்னேறியுள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே இரண்டாமிடத்திலிருந்து முதலாமிடத்துக்கு ஸ்டார்க் முன்னேறியுள்ளார்.
இப்போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தென்னாபிரிக்காவின் சைமன் ஹாமர், 16ஆம் இடத்திலிருந்து 9 இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
மிற்செல் ஸ்டார்க், 2. மார்கோ ஜன்சன், 3. மற் ஹென்றி, 4. ஒலி றொபின்சன், 5. ஜஸ்பிரிட் பும்ரா, 6. ஸ்கொட் போலண்ட், 7. சைமன் ஹாமர், 8. ககிஸோ றபாடா, 9. பற் கமின்ஸ், 10. ஜொஷ் ஹேசில்வூட்.
இதேவேளை சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையிலும் எட்டாமிடத்திலிருந்து ஐந்தாமிடத்துக்கு ஹாமர் முன்னேறியுள்ளார்.
இதுதவிர இப்போட்டியில் 115 ஓட்டங்களைப் பெற்றதோடு, ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய வியான் முல்டர், நான்காமிடத்திலிருந்து மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.