பலமான நிலையில் கோட்டாபயவுக்கு எதிரான விசாரணைகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் பலமான நிலையில் உள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று அறிவித்துள்ளார்.

குறித்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசை திருப்பியமை தொடர்பாக சுரேஷ் சலே உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகநபரான சுரேஷ் சலேவை தாம் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டதாகவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தன்னை நன்றாக நடத்துவதாக சந்தேகநபர் சலே தன்னிடம் கூறியதாகவும் கோட்டை நீதவான் பசான் அமரசேன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசை திருப்பியமை தொடர்பாக, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் அழைக்கப்பட்டபோது, நீதவான் பசான் அமரசேன குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் பின்வருமாறு வினவினார்:

இவ்வழக்கின் மூன்றாவது சந்தேகநபரும், தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ளவருமான சுரேஷ் சலேவை நான் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டேன்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தம்மை மிகவும் நன்றாக உபசரிப்பதாக அவர் கூறினார். அவர் சில உணவு வகைகளைக் கோரியிருந்தார். அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

அதற்கு அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன் பின்னர், சுரேஷ் சலே சார்பாக ஆஜரான சட்டத்தரணி அசித் சிறிவர்தன திறந்த நீதிமன்றத்தில் பின்வருமாறு கூறினார்:

எனது கட்சிக்காரரை வெலிசறைக்கு அனுப்புவதை விட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வைத்திருப்பதே நல்லது.

அதேபோல, எனது கட்சிக்காரரை வைத்தியசாலையில் அனுமதிப்பது அவசியம் எனத் தெரிவித்த மாத்திரத்திலேயே, உடனடியாக அதற்கு அறிவுறுத்தல்களை வழங்கித் தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள வழிசெய்தமைக்காக மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுக்கு நான் விசேடமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இதன்போது சலே தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேற்படி விசாரணைகள் குறித்து மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தார்.

“கனம் நீதவான் அவர்களே, 121 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தச் சந்தேகநபர், முன்பு இருந்ததை விடவும் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் நலமாக உள்ளார்.

முடங்கிக் கிடந்த விசாரணைகள் தற்போது விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் நாங்கள் சில முக்கிய சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்தோம்.

அவர்களுள் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல்களை வழங்கிய மிக்கேல் சேவியர் வில்வரசிங்கம் அல்லது ராஜன் என்பவரும் ஒருவர். இவர் இராணுவத்தின் கோப்ரல் சுரங்க என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறன்று குண்டை வெடிக்கச் செய்த இன்சாஃப் அஹமட்டின் மாமனாரான அலவுதீன் எனும் வர்த்தகர் குறித்து நான் முந்தைய நாளில் குறிப்பிட்டிருந்தேன்.

அவரின் நண்பரான தீபன் என்பவரின் வீட்டில் என்ன நடக்கிறது என ஆராய இராணுவம் இந்தத் தகவல் வழங்குநரான ராஜனை அனுப்பியுள்ளது.

அன்றைய தினம் தீபனின் வீட்டில் கருப்பு புர்கா அணிந்த பெண்ணொருவரும் வேறொரு ஆணும் இருந்துள்ளனர். அவர்கள் மட்டக்களப்புப் பிரதேச பேச்சுவழக்கிலான தமிழ் மொழியில் பேசியுள்ளனர்.

இந்த உரையாடல் தொடர்பான தகவல்களை ராஜன் சுரங்கவிற்கு அறிவித்துள்ளார். இது ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னதாக நடந்துள்ளது.

தாக்குதலுக்குப் பின்னர் தொலைக்காட்சிச் செய்தி அலைவரிசைகளில் செய்திகள் ஒளிபரப்பானபோது, அன்று தான் பார்த்தது சாரா ஜெஸ்மின் என்பதை ராஜன் அடையாளம் கண்டுள்ளார்.

அந்த சாரா ஜெஸ்மின் தான் முதலில் இறந்துவிட்டதாகவும், பின்னர் இல்லை என்றும் கூறப்பட்டவர். எப்படியோ இந்த அடையாளங்காணலை ராஜன் சுரங்கவிடம் கூறியபோது, ‘இவற்றையெல்லாம் மண்டையில் ஏற்றிக்கொள்ள வேண்டாம், அமைதியாக இருங்கள், மறந்துவிடுங்கள் என சுரங்க கூறியுள்ளார்.

எப்படியோ இந்தத் தகவல்கள் அனைத்தும் மக்கள் மயமாவதையும் வெளிப்படுவதையும் இந்தச் சந்தேகநபரான சுரேஷ் சலேவின் அனுசரணையுடனே அல்லது அறிதலுடனே தடுத்துள்ளனர்.

தற்போது வரை வெளிவந்துள்ள தகவல்களின்படி, இந்த சலே என்பவர் முன்னாள் எல்.டி.டீ.ஈ உறுப்பினரான கருணா அம்மானுக்குப் போலி இராஜதந்திர கடவுச்சீட்டைத் தயாரித்து பிரித்தானியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

‘இராணுவத்தைச் சேர்ந்த சலே மற்றும் அன்சார் ஆகியோரே எனக்கு இந்தக் கடவுச்சீட்டைத் தயாரித்துத் தந்தனர் என கருணா கூறுகிறார். இது சுற்றாடல் அமைச்சின் செயலாளரெனக் கூறப்படும் கோகில துஷ்மந்த என்பவரின் பெயரிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அப்படி ஒரு நபர் இருக்கவில்லை. அந்தக் கடவுச்சீட்டைப் பயன்படுத்திச் சென்று கருணா அம்மான் பிடிபட்ட பின்னர், பிரித்தானிய சிறையில் அடைக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதேபோல இந்தச் சந்தேகநபர் சலேவிடம் பல கடவுச்சீட்டுகள் உள்ளன. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் சிறையிலுள்ள மூன்று குற்றவாளிகளிடம் வாக்குமூலங்களைப் பெறுவதற்கு அனுமதி கோரினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முதன்மை வழக்கு தான் அண்மையில் மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற அமர்வின் முன் நிறைவடைந்தது.

அதில் தங்களைக் குற்றவாளிகளாகத் தீர்மானித்த போதிலும், நாங்கள் சிறைக்குச் சென்றாலும், உண்மையிலேயே இதனுடன் தொடர்புடையவர்கள் வெளியே தான் இருக்கிறார்கள் என மூன்று குற்றவாளிகளும் பயமின்றி நீதிபதிகள் குழாம் முன்னிலையில் கூறுகிறார்கள்.

இது ஒரு பாரதூரமான கூற்றாகும். அதற்கமைய மில்ஹான், ரிஸ்கான் மற்றும் செல்னுல் ஆப்தீன் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பெற அனுமதி வழங்குங்கள்.

அதன்பின்னர் சந்தேகநபர் சுரேஷ் சலே சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ தனது சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

இதற்கு முன்னரும் நான் கூறியுள்ளேன். இந்த வழக்கில் வாக்குமூலங்கள், மட்டுமே உள்ளன. எந்தவொரு சாட்சியமும் இல்லை. எனது கட்சிக்காரரிடம் பல கடவுச்சீட்டுகள் இருப்பதாகக் கூறினால், அவற்றின் எண்கள் என்ன? அவை எவ்வாறு பெறப்பட்டன என்று கூற வேண்டும்.

இல்லையெனில் சலேவிடம் 2, 03 கடவுச்சீட்டுகள் இருந்தன என்ற செய்தியே ஊடகங்களுக்குச் செல்லும். மற்றது, எனக் கூறப்படும் கருணா அம்மானுக்குக் கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் காலத்தில் எனது கட்சிக்காரர் பிரான்ஸில் இருந்தார். பிரான்ஸில் இருந்துகொண்டு இலங்கையில் எவ்வாறு கடவுச்சீட்டு தயாரிக்க முடியும்?

இதன்போது நீதவான், மேலதிக சொலிசிட்டர் ஜெனரலிடம் பின்வருமாறு கேள்வியெழுப்பினார்.

இவ்வழக்குடன் தொடர்புடைய வகையில் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ஒருவர், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அந்த வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு மனுவொன்றின் ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தற்போது இவ்வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை. அது தொடர்பான விசாரணைகள் எவ்வாறான நிலையில் உள்ளன?

அதற்கு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் பின்வருமாறு பதிலளித்தார்:

அந்த மனுவின் பிரதியொன்றை சட்டத்தரணி எனக்கும் அனுப்பியிருந்தார். சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவைச்சிகிச்சைக்கான தொடர் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நவம்பர் நடுப்பகுதி வரை 02 வாரங்களுக்கு வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் தற்போது சந்தேகநபராகப் பெயரிடப்படாததற்கு காரணம், கனம்பொருந்தியோரே, ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பாக மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய விசாரணைகள் நிலுவையில் உள்ளமையும், முன்னாள் ஜனாதிபதி தாக்கல் செய்த வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளமையுமே ஆகும்.

இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பான விசாரணைகள் தற்போது பலமான நிலையில் உள்ளன. எனினும் அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விரும்பினால், மனிதநேய அடிப்படையில் அதற்கு அனுமதியளிக்க முடியும்.

அதற்கமைய, கருத்துக்களை ஆராய்ந்த கோட்டை நீதவான் பசான் அமரசேன, முறைப்பாட்டாளர்களின் கோரிக்கைகளுக்கு அனுமதியளித்ததுடன், விசாரணைப் முன்னேற்றத்தைப் சமர்ப்பிப்பதற்காக வழக்கை நவம்பர் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

gajendra

ராஜ்சோமதேவ ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி- ஒருநிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றார்- நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

October 22, 2026

பேராசிரியர் ராஜ்சோமதேவ சுத்தமான சிங்கள பௌத்த தேசியவாதி அவர் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுகின்றார் என தமிழ்தேசிய மக்கள்

16930815621492431198

பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை

October 22, 2026

விகாரமகாதேவி பூங்காவில் பௌத்தமதகுருமார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்மதகுருமாரை அங்கிருந்து அகற்றுவதற்கு நீதிமன்ற

Easter1

உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரே சாராஜஸ்மினை கண்காணித்த இராணுவபுலனாய்வாளர்- நீதிமன்றில் தகவல்

October 22, 2026

இராணுவபுலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவர் உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரே சாராஜஸ்மினை கண்காணித்தார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தீலீப பீரிஸ்

court-judge-hammer-gavel-696x398

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கான வாய்மூல சமர்ப்பணம் நிறைவு

October 22, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை’ சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான வாய்மொழி சமர்ப்பணங்கள்

1200-675-27152847-thumbnail-16x9-kanimozhi

“சமூக ஊடகங்களில் பெண்களைத் தொடர்ந்து அவதூறாகப் பேசும் தவெகவினர்!” – கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!

October 22, 2026

சென்னை: சட்டரீதியாகவும், காவல்துறையை வைத்தும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் பெண்கள் மீது தவெகவினர் தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று

admk-whip-appointment-kp-munusamy-edappadi-palaniswami-meeting-cv-shanmugam-2026-05-16-17-43-38

“தவெக சீக்கிரம் காணாமல் போய்விடும்!” – கே.பி.முனுசாமி காட்டம்!

October 22, 2026

தருமபுரி: தமிழக அரசியலில் இருந்து தவெக சீக்கிரம் காணாமல் போய்விடும் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

94106644181cab18a678116c6d8741f5

“பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற கஸ்தூரி ராஜாமணிக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை!” – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

October 22, 2026

சென்னை: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வலுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு முதலமைச்சர்

1200-675-24979643-thumbnail-16x9-sengottaiyan

உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைப்பு ஏன்? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

October 22, 2026

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

பலமான நிலையில் கோட்டாபயவுக்கு எதிரான விசாரணைகள்

October 22, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் பலமான நிலையில் உள்ளதாக

Amnesty-900x550

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தால் மனித உரிமைகளுக்கு கடும் பாதிப்பு

October 22, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ மூலமாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான

nurai

நாளை முதல் வழமைக்கு நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள்

October 22, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என தேசிய மின்

thethu

நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு

October 22, 2026

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள பிரதேசங்களுக்கு பலத்த மழை பெய்து வருவதால், அந்த நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளைத்