திருத்தப்பட்ட சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைவாக, கலகொட அத்தே ஞானசார தேரர் எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி காவியுடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என புத்தசாசன அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரை காவியுடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, அவர் அங்கம் வகிக்கும் பௌத்த பீடத்தின் மகாநாயக்க தேரருக்கு பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் கடிதம் அனுப்பியுள்ளார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வழிகாட்டல்களைப் பெற்று, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மேலும் தெரிவித்துள்ளார்.