“மிஸ்டர் கிளீன் ஆட்சி! மெத்தபெட்டமைன் நெட்வொர்க்கால் அதிர்ந்துபோன தமிழகம்!” – தவெக அரசை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!

தமிழ்நாடு: மிஸ்டர் கிளீன் ஆட்சியில், மெத்தபெட்டமைன் கடத்தல் நெட்வொர்க்கால் தமிழகம் அதிர்ந்துபோயிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் மிஸ்டர் கிளீன் ஆட்சி என்று உத்தரவாதம் தந்த நிலையில், ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கில் தவெகவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு: தவெக ஆட்சி, தூய ஆட்சி, மிஸ்டர் கிளீன் ஆட்சி என்றெல்லாம் உத்தரவாதம் தந்தார் முதலமைச்சர் விஜய். தற்போது இந்த 5 மாத காலத்திலேயே, ரூ.100 கோடி […]

முல்லைத்தீவுக்கு அருகே நகராமல் நிற்கும் காற்றழுத்த தாழ்வு நிலை!

முல்லைத்தீவுக்கு அண்மையில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கனமழை தொடரக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். நேற்று (20) வடக்கு மாகாணத்திற்கு வடகிழக்குத் திசையில் நிலைகொண்டிருந்த வளிமண்டல கீழடுக்கு காற்றுச் சுழற்சி, இன்று (21) காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த காற்றுச் சுழற்சி எதிர்பார்க்கப்பட்ட வேகத்தில் நகராமல், மிகக் குறைந்த வேகத்தில் நகர்ந்து தற்போது […]

சபையில் வெடித்த அர்ச்சுனா!

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்டம் பொதுமக்கள் என வரும் பொழுது வேறு விதமாகவும், அரசியல் தலைவர்கள் என வரும் பொழுது வேறு விதமாகவும் செயற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அகிம்சை வழியில் போராடி உயிரிழந்த தியாக தீபம் திலீபன் சிலை அகற்றல் விவகாரம் கடந்த சில வாரங்களாக தமிழர்கள் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதற்கான வழக்கும் யாழ். […]

ஊடகவியலாளர் நிமலராஜன் – 26ஆவது ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிம்மலராஜனின் 26 வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வுகள், இன்று(21.10.2026) சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் அதன் தலைவர் சி.த.காண்டீபன் தலைமையில் இன்று மதியம் 1:00 மணியளவில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

இலங்கையில் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக மக்கள் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விலை அதிகரிப்பு நேற்று(20.10.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக நிறுவன தரப்புகள் மற்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் தொழில் செய்யும் தாம், பாண், கோதுமை மாவு உள்ளிட்ட உணவுகளை இரண்டு வேளை உண்பதாகவும், தமது மக்கள் நீண்ட காலமாக […]

அவதானமாக இருங்கள்..

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் ‘டீப்ஃபேக்’ (Deepfake) தொழில்நுட்ப மோசடிகள் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் உள்ள புகைப்படங்கள் மற்றும் குறுகிய குரல் பதிவுகளைப் பயன்படுத்தி, உறவினர்கள் அல்லது நண்பர்களின் குரல் மற்றும் முகப்போலிகளை (Deepfake Videos & Voice Recordings) போலிச் சித்தரிப்பாக உருவாக்குகி மோசடி செய்பவர்கள் பணத்தைக் கோருகின்றனர். எனவே சந்தேகத்திற்குரிய அழைப்புகள் அல்லது காணொளி அழைப்புகள் வந்தால், உடனடியாகப் பணத்தையோ அல்லது வங்கிக் கணக்கு விபரங்களையோ […]

திலீபன் சிலை விவகாரம் – நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளது என்ன?

தியாகதீபம் தீலீபின் உருவச்சிலையை நிறுவியது தொடர்பில் அரசியல்வாதிகள் உட்பட 14 பேரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது திலீபனின் சிலைக்கான நிதியை வழங்கியது,அதனை உருவாக்கியது, ஊக்குவித்தது மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது தொடர்பில் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். பொலிஸார் தமது விசாரணைகளின் மூலம் திலீபன் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் என்பதை உறுதி செய்துள்ளனர். சட்டமா […]

காவியுடையிலேயே நாளை ஞானசாரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்

பொதுபலசேனாவின் ஞானசார தேரர் காவியுடையுடனேயே 23ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட சிறைச்சாலை விதிகளின் படி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்,என தெரிவித்துள்ள அமைச்சர் ஞானசாரதேரர் எந்த பௌத்தமத பிரிவை சேர்ந்தவரோ அந்த பிரிவின் பீடாதிபதிக்கு ஞானசாரதேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் வழிகாட்டுதல்களை கோரி கடிதமொன்றை அனுப்பியுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடமும் உரிய ஆலோசனைகளை கோரியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜூன்மாதம் ஸ்ரீலங்கன் எயார்லைன்சின் கணிணி அமைப்புகளை முடக்கிய ஹேக்கர்கள் – அதிர்ச்சி தகவலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார் தயாசிறி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் கணிணி அமைப்புகளை முடக்கிய ஹேக்கர்கள் கிரிப்டோகரன்சியில் 50,000 டொலர்களை கோரியுள்ளனர் என்ற பரபரப்பு தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறிஜெயசேகர நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார். தேசிய விமானசேவை நிறுவனம் இன்னமும் சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2026ஜூன் மாதத்தில் ஸ்ரீலங்கன்எயார்லைன்சின் கணிணி அமைப்புகள் ஊருவப்பட்டன என தெரிவித்துள்ள அவர் பின்னர் டார்க்வெப்பில் ஹக்கர்கள் இந்த தாக்குதலிற்கு பொறுப்பேற்றனர் என குறிப்பிட்டுள்ளனர். ஹேக்கர்கள் விமானநிறுவனத்தின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் வைத்திருப்பதாக தெரிவித்து வீடியோவொன்றை வெளியிட்டதுடன் கிரிப்டோ […]

சத்துருக்கொண்டான் படுகொலைக்கு 37 ஆண்டுகளாகியும் நீதி இல்லை! குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரியை ஏன் விசாரிக்கவில்லை?சாணக்கியன்

சத்துருக்கொண்டான் படுகொலைக்கு 37 ஆண்டுகளாகியும் நீதி இல்லை! முறைப்பாட்டில் பெயர் குறிப்பிடப்பட்ட இராணுவ அதிகாரியிடம் ஏன் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை? என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது சத்துருக்கொண்டான் படுகொலை இடம்பெற்று 37 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இந்தப் படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இந்தப் படுகொலை தொடர்பில் கடந்த ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த முறைப்பாட்டில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இராணுவ அதிகாரி தொடர்பில் இதுவரை […]