செம்மணி அநீதிக்காகக் குரல் கொடுக்க இவ்வளவு பேர் இங்கு திரண்டுள்ளமை நம்பிக்கையளிக்கின்றது! – கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் யுவனிதா நாதன்

கனடாவின் ஒட்டாவாவில் நேற்று இடம்பெற்ற செம்மணி மனிதப் புதைகுழி குறித்த மாநாட்டில் செம்மணி அநீதிக்காகக் குரல் கொடுக்க இவ்வளவு பேர் இங்கு திரண்டுள்ளமை நம்பிக்கையளிக்கின்றது என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் யுவனிதா நாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் என்பது – செம்மணி எனக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கமானது,குறுகிய அறிவிப்பில் இவ்வளவு பேர் இங்கு திரண்டுள்ளமை எனக்கு நம்பிக்கையளிக்கின்றது. கடந்த வருடம் நான் உரையாற்றியவேளை 240 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன,இம்முறை அந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது, 543 ஆகியிருக்கலாம் […]

முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மேயர் பிரியா ஆய்வு!

சென்னை: பெரம்பூர் சுரங்கப்பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் அகற்றும் பணிகளைச் சென்னை மேயர் பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடிய விடிய மழை: வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்கள் தொகுதிகளில் மழைநீர் அகற்றும் […]

“புகார் அளித்த 10 நிமிடத்தில் தீர்வு!” – தி.நகரில் ஸ்கூட்டரில் சென்று மழைநீர் அகற்றும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் ஆனந்த்!

சென்னை: புகார் அளித்த 10 நிமிடத்தில் பிரச்சினையைச் சரி செய்து விடுவோம் என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார். தி.நகரில் தேங்கிய மழைநீர்: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய வணிகப் பகுதியான தி.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழைநீரை அகற்றும் பணிகளை அமைச்சர்களும், அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வு செய்து […]

காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் விஜய் மலர் வளையம் வைத்து மரியாதை!

சென்னை: காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காவலர் வீரவணக்க நாள்: அக்டோபர் 21-ஆம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1959-ஆம் ஆண்டு இதே நாளில், லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் […]

“நாதக வேட்பாளர் கார்த்திகா உட்பட 9 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்!” – கோவை மத்திய சிறையில் அடைப்பு!

திருப்பூர்: தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு, அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் பிரசாரம்: தாராபுரம் தொகுதியில் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, முதலமைச்சர் விஜய் அக்டோபர் 4-ஆம் தேதி பிரசாரம் செய்ய அனுமதி பெற்றிருந்த இடத்தில், நாம் தமிழர் கட்சியினரும் அனுமதி கேட்டனர். அதை நிராகரித்த காவல்துறையினர் […]

“பிரசவ காலத்தை நெருங்கும் கர்ப்பிணிகள் வெள்ள அபாயப் பகுதிகளில் தங்க வேண்டாம்!” – அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்!

சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பிரசவ காலத்தை நெருங்கும் கர்ப்பிணிகள் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் தங்க வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். 7 நாட்களுக்கு மருந்து இருப்பு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோய் பரவல் தடுப்பு, உயிரிழப்பு தடுப்பு, […]

“மாற்றம் என்று வந்தவர்கள் கைது நடவடிக்கையைத் தீர்வாகக் கருதுவது நியாயமா?” – கார்த்திகா கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

சென்னை: மாற்றம், மாற்றம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொள்ளக் கைது நடவடிக்கையைத் தீர்வாகக் கருதுவது எந்த வகையில் நியாயம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாலை 5.30 மணிக்கு கைது: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை, அதிகாலை 5.30 மணியளவில், அவர் இரவு உடையில் இருந்தபோது, உடை மாற்றிக்கொள்ளக்கூட அவகாசம் வழங்காமல் காவல்துறையினர் கைது […]

புதுக்குடியிருப்பு பேராற்றில் நீராடச் சென்ற இளைஞன் பலி!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட கள்ளியடி பகுதியில் உள்ள பேராற்றில் நண்பர்களுடன் நீராடச் சென்ற 20 வயதுடைய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கடந்த 17 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நீரில் மூழ்கிய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து […]

“அரசியல் விமர்சனங்கள் நாகரிக வரம்புக்குள் இருக்க வேண்டும்!” – திமுக பெண் பிரமுகர் பேச்சு குறித்து திருமாவளவன் அறிவுறுத்தல்!

சென்னை: அரசியல் விமர்சனங்கள் நாகரிக வரம்புக்குள் இருக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். கடை திறப்பு விழா: சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற தனியார் கண்ணாடிக் கடை திறப்பு விழாவில், உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டு கடையைத் திறந்து வைத்தனர். 63 லட்சம் மெட்ரிக் டன் நெல் இருப்பு: ரேஷன் கடைகளில் சன்ன ரக அரிசி குறைவாக விநியோகிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்துப் பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன், […]

“அரசியல் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளும் பாசிசப் போக்கு!” – கார்த்திகா கைதுக்கு தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கார்த்திகாவைக் கைது செய்திருப்பதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாராபுரம் இடைத்தேர்தலின்போது முதலமைச்சர் பிரசாரம் செய்த இடத்தில் அனுமதியை மீறிப் பிரசாரம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதாகக் கார்த்திகா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அராஜகப் போக்குடன் கைது: நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகாவை, இன்றைய தவெக அரசு […]