செம்மணி ஒரு இனப்படுகொலையின் அடையாளம் – கலாநிதி மரியோ அருள்தாஸ்

கடந்த மூன்று தசாப்தங்களாக உருவெடுத்து வந்த ஒரு யதார்த்தத்தை எதிர்கொள்வதற்காக நாங்கள் இங்கே கூடியிருக்கின்றோம். அது மிகவும் அவசரமானது மிகவும் கனதியானது. இது செம்மணி மனித புதைகுழிகள் மற்றும் இலங்கையில் தொடரும் கட்டமைக்கப்பட்ட தண்டனையிலிருந்து விடுவித்தல் குறித்த யதார்த்தம். நீதிக்கான அடிப்படை அழுத்தங்களை கனடா எவ்வாறு முன்னெடுக்கலாம் என்ற அடிப்படை கேள்வி தொடர்பானது. ஈழதமிழ் சமூகத்திற்கு வெளியே உள்ள பலருக்கு செம்மணி ஒரு தொலைதூர பகுதியாக தோன்றலாம்.ஆனால் உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் மில்லியன் கணக்கான தமிழர்களுக்கும்,கனடாவை தங்கள் […]

செம்மணி மனித புதைகுழி; சர்வதேச நீதியை பொறுப்புக்கூறலை வேண்டி நிற்கும் விடயம் – அமைச்சர் ஹெரி ஆனந்தசங்கரி

செம்மணி மனித புதைகுழி என்பது சர்வதேச நீதியை பொறுப்புக்கூறலை வேண்டி நிற்கும் விடயம் என கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஹெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கனடாவின் ஒட்டாவாவில் நேற்று இடம்பெற்ற செம்மணி மனிதப் புதைகுழி குறித்த மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது சமீபகாலத்தில் 600க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிவருகின்ற தகவல்கள் இலங்கையில் நீதிக்காக மனித உரிமைகளுக்காக போராடும் எங்களுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது யுத்த குற்றங்களுக்காகசர்வதேச சமூகத்தின் கவனத்தை சர்வதேச சமூகத்தின் […]

அல்லைப்பிட்டியில் விபத்து!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று முற்பகல், அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன், அதே திசையில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் படுகாயமடைந்த பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் […]

தரமற்ற நிலக்கரி காரணமாக மின்வெட்டா?

நுரைச்சோலை மின் நிலையத்திற்குத் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்பட்டதன் காரணமாக மின்வெட்டைச் சந்திக்க நேர்ந்ததாக வெளியாகும் குற்றச்சாட்டுகள் உண்மையானவையல்ல என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். மின் நிலையத்தின் 1 ஆம் இலக்க மின் உற்பத்தி இயந்திரம் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் 4 ஆம் திகதி வரை மூடப்பட்டிருந்ததாகவும், செப்டம்பர் 4 ஆம் திகதி முதல் […]

நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்கும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது – மீண்டும் வலியுறுத்திய ஈரான்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை அதனைத் திறக்கப் போவதில்லை என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஊடாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாதா?

உயர் நீதிமன்றத்தினால் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக அரசாங்கத்தால் செயற்பட முடியாது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று(20) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கத்தால் ஏன் முடியாது என இச்சந்திப்பின் போது அமைச்சரிடம் வினவப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், சட்டத்தின் ஆட்சியையும் ஆதிக்கத்தையும் சரியாக நடைமுறைப்படுத்துவதற்காகவே தற்போதைய அரசாங்கம் […]

துப்பாக்கிதாரிகள் கடத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

மொறட்டுவை, சொய்சாபுர பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரிகள் கடத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் பிலியந்தலை, சித்தமுல்ல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (20) இரவு 8.30 மணியளவில் சொய்சாபுர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அதன் உரிமையாளர் உயிரிழந்ததுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வாடிக்கையாளரான பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் வந்த இனந்தெரியாத இருவர், T-56 ரக துப்பாக்கியால் உணவக உரிமையாளரை இலக்கு வைத்துச் சுட்டுவிட்டுத் […]

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு!

உடன் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை உயர்த்துவதற்கு உரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலும் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின்னல் தாக்கத்தில் இருவர் பலி

அனுராதபுரத்தின் ரபேவா பகுதியில் நெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த மூவர் மீது மின்னல் தாக்கியதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒக்டோபர் 23 இல் காவியுடையில் ஞானசார தேரர்

திருத்தப்பட்ட சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைவாக, கலகொட அத்தே ஞானசார தேரர் எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி காவியுடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என புத்தசாசன அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். ஞானசார தேரரை காவியுடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, அவர் அங்கம் வகிக்கும் பௌத்த பீடத்தின் மகாநாயக்க தேரருக்கு பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் கடிதம் அனுப்பியுள்ளார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வழிகாட்டல்களைப் பெற்று, சிறைச்சாலைகள் ஆணையாளர் […]