ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாதா?

உயர் நீதிமன்றத்தினால் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக அரசாங்கத்தால் செயற்பட முடியாது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று(20) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கத்தால் ஏன் முடியாது என இச்சந்திப்பின் போது அமைச்சரிடம் வினவப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், சட்டத்தின் ஆட்சியையும் ஆதிக்கத்தையும் சரியாக நடைமுறைப்படுத்துவதற்காகவே தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது என்பதால், உயர் நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் நடந்து கொள்ள அரசாங்கத்தால் முடியாது எனக் கூறினார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ,

“வெளியில் இருந்த ஒரு தேரரை அரசாங்கம் சென்று எங்கேனும் சிறையிலடைக்கவில்லை. இது நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு… தவறு இழைக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு அதற்கு உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், எல்லா இடங்களிலும் குழுக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுக்கத் தொடங்கினால், உயர் நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் நடந்து கொள்ளுமாறு ஒரு அரசாங்கத்திடம் கூறினால், அரசாங்கத்தால் அப்படிச் செய்ய முடியாது. சட்டத்தின் ஆட்சியையும் ஆதிக்கத்தையும் சரியாக நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது.

தராதரம், பதவி அல்லது அதிகாரம் ஆகியவற்றின் முன்னிலையில் சட்டத்தை வளைக்காமல் அனைவருக்கும் சட்டத்தையும் நீதியையும் சமமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே அரசாங்கத்திற்கு வாக்களிக்காத மக்கள் கூட எதிர்பார்க்கின்றனர். எனவே அதற்கு அமைய நடைமுறையிலுள்ள சட்டத்தின் படியும் உயர் நீதிமன்ற உத்தரவுகளின் படியும் செயல்படுவோம்” என்றார்.

IMG_0816

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

October 27, 2026

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, பல மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மூன்றாம் நிலை சிவப்பு

IMG_0815

வங்காள விரிகுடாவில் மீண்டும் உருவாகும் தளம்பல் நிலை ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

October 27, 2026

வங்காள விரிகுடா கடற்பகுதியில் எதிர்வரும் 31 ஆம் திகதியளவில் மீண்டும் ஒரு தளம்பல் நிலை உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

IMG_0814

இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

October 27, 2026

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும் மொத்தமாக இதுவரையில் 105,295 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

8

“பழக்க தோஷத்தில் ஆவின் பொருள்களை பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

October 27, 2026

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆவின் நெய், வெண்ணெய் மற்றும் இனிப்புப் பலகாரங்களின் விலையைத் தமிழக வெற்றிக் கழக அரசு

7

“8 பேர் அமைச்சர் ஆகிவிட்டதால் மட்டும் அனைத்தும் ஒரே நாளில் மாறிவிடாது” – அமைச்சர் வன்னி அரசு!

October 27, 2026

கோயம்புத்தூர்: சாதிய வன்கொடுமையால் கோவையில் சமீபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவர் அகிலனின் இல்லத்திற்குச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

6

“முதல்வர் ஒரு ஃபைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைது!” – நிர்மல்குமார் பேட்டி!

October 27, 2026

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதில் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் திமுக

5

“அன்பில் மகேஷ் கைது எதிரொலி; இனி வரும் காலம் திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள்..!” – தவெக பதிவு!

October 27, 2026

சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதைத் தொடர்ந்து, இனி வரும் காலம் திமுகவிற்குத் திக் திக் நிமிடங்கள் என்று

4

“திமுக தீய சக்தி என்றால் தவெக கொடிய தீய சக்தி!” – சீமான் கடும் விமர்சனம்!

October 27, 2026

சிவகங்கை: திமுக தீய சக்தி என்றால், ஆளும் தமிழக வெற்றிக் கழகம் ஒரு கொடிய தீய சக்தி என்று நாம்

3

“வெளியில் குற்றவாளிகள்… கைதிகளும் தப்பியோட்டம்” – மு.க.ஸ்டாலின் சாடல்!

October 27, 2026

சென்னை: தேனி மாவட்டச் சிறையில் இருந்து பதினேழு கைதிகள் ஒட்டுமொத்தமாகத் தப்பிச் சென்ற மாபெரும் அதிர்ச்சிச் சம்பவத்திற்குத் திராவிட முன்னேற்றக்

2

“அன்பில் மகேஷ் கைது: மிரட்டலுக்கு திமுக அஞ்சாது” – சேகர்பாபு!

October 27, 2026

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு முறையான அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் நானூறு கோடி ரூபாய் அளவுக்கு மாபெரும் மோசடி

1

“சிறையில் இருந்து தப்பிய மேலும் 8 கைதிகள் சிக்கினர்!” – எஞ்சியுள்ள 4 பேரை தேடும் பணி தீவிரம்!

October 27, 2026

சென்னை: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்டச் சிறையில் இருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளில் மேலும்

Toronto-Election-1536x783

டொராண்டோ மாநகராட்சித் தேர்தல் 2026: நகரசபைக்குத் தேர்வானவர்கள் மற்றும் வெளியேறியவர்களின் முழுமையான பட்டியல்

October 27, 2026

திங்கள்கிழமை நடைபெற்ற டொராண்டோ மாநகராட்சித் தேர்தலில் 7 புதிய கவுன்சிலர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் மூலம் தற்போதைய கவுன்சிலர்கள்