சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இதுவரை மக்களை நேரடியாகச் சந்திக்கவில்லை என்று பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். பாஜக மாநிலத் தலைவர் பதவி, முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
பாஜக தலைவர் பதவியா?:
தமிழ்நாட்டின் பாஜக தலைவராகப் பொறுப்பேற்கப் போகிறீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த சரத்குமார், பத்திரிகைகளில்தான் இதுபோன்ற செய்திகளைக் காண்கிறேன். கட்சித் தலைமை என்னிடம் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னால், உங்களுக்குத் தகவல் கூறுகிறேன் என்றார்.
ஹனிமூன் பீரியடில் முதலமைச்சர்:
முதலமைச்சர் விஜய் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், அவர் இன்னும் ஹனிமூன் பீரியடில் இருக்கிறார். 6 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று கூறியுள்ளார். புதிதாக யார் வந்தாலும், நிர்வாகத்தில் என்ன நடக்கிறது, கோப்புகள் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். பாஜக மாநிலத் தலைவராகவோ, மத்திய அமைச்சராகவோ இல்லாததால் கருத்து சொல்லும் நிலையில் நான் இல்லை. அது தொடர்பாக ஆழமாகச் சிந்திக்கவும் இல்லை என்று தெரிவித்தார்.
மக்களை நேராகச் சந்திக்கவில்லை:
முதலமைச்சர் விஜய் இன்னும் மக்களை நேராகச் சென்று பார்க்கவில்லை. அவர் செல்லும் நிகழ்ச்சிகளில் கூடும் மக்களைத்தான் சந்தித்து வருகிறார் என்று சரத்குமார் கூறினார்.
கொலைகளுக்கு அரசு காரணமல்ல:
சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை, பிற மாநிலங்களைப் போலத் தமிழ்நாட்டில் கலவரங்கள் ஏற்படுவதில்லை. ஆங்காங்கே நடக்கும் கொலைகள் அனைத்துக்கும் அரசுதான் காரணம் என்று கூற முடியாது. எந்த ஆட்சியாக இருந்தாலும் இந்தக் கருத்தைத்தான் நான் கூறுவேன் என்று அவர் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் குறித்து விமர்சனமும், சட்டம் ஒழுங்கு குறித்து அரசுக்கு ஆதரவான கருத்தும் என சரத்குமாரின் இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
#Sarathkumar #BJP #CMVijay #TVK #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive