யாழில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம் !

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் சேவையின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அ. கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இச்சேவையினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் குறித்த சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதன்மூலம், புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்வதற்காகப் பொதுமக்கள் வேறு மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை குறைக்கப்படுவதுடன், அரச சேவைகளை மக்களுக்கு அண்மையில் கொண்டு செல்லும் நடவடிக்கையும் மேலும் வலுப்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரச சேவைகளை மக்களின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று முதல் புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான பதிவுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் ஏனைய மோட்டார் வாகனங்களுக்கான பதிவுச் சேவைகளையும் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

இதற்காக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்துடன் தாம் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே, மோட்டார் வாகனங்களின் உரிமை மாற்றச் சேவைகள், சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பரீட்சைகள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் ஒருநாள் சேவை மற்றும் வழமையான சேவை அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும், இவற்றின் தொடர்ச்சியாகவே புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச்சீட்டுச் சேவைகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுவதால், பொதுமக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காகத் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சிரமம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஓய்வூதியதாரர்கள் தமது விரலடையாளங்களைப் பதிவு செய்வதற்காக அநுராதபுரம் மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலையைத் தவிர்க்கும் நோக்கில், ஓய்வூதியத் திணைக்களத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கமைய, 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியதாரர்கள் தமது சொந்த மாவட்டமான யாழ்ப்பாணத்திலேயே விரலடையாளங்களைப் பதிவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தற்போது போதிய இடவசதியின்றிச் செயற்பட்டு வருவதைக் கருத்திற்கொண்டு, வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின் அல்லப்பிட்டி பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் காணி திணைக்களத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

குறித்த காணியில் அலுவலகக் கட்டடம் மற்றும் சாரதி பயிற்சிக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டமிடல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது பொதுமக்கள் மேலும் இலகுவாகவும் சிரமமின்றியும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரச சேவைகள் மக்களைச் சென்றடைவதுடன், அவை விரைவாகவும் வினைத்திறனுடனும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்த அரசாங்க அதிபர், இத்தகைய சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு மேலும் சிறந்த அரச சேவைகளை வழங்கும் நோக்கில், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந் ஆரம்ப நிகழ்வில் மாவட்டச் செயலக பிரதம எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் கே. திருக்குமார், பிரதம வாகனப் பரிசோதகர், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

IMG_0816

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

October 27, 2026

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, பல மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மூன்றாம் நிலை சிவப்பு

IMG_0815

வங்காள விரிகுடாவில் மீண்டும் உருவாகும் தளம்பல் நிலை ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

October 27, 2026

வங்காள விரிகுடா கடற்பகுதியில் எதிர்வரும் 31 ஆம் திகதியளவில் மீண்டும் ஒரு தளம்பல் நிலை உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

IMG_0814

இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

October 27, 2026

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும் மொத்தமாக இதுவரையில் 105,295 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

8

“பழக்க தோஷத்தில் ஆவின் பொருள்களை பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

October 27, 2026

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆவின் நெய், வெண்ணெய் மற்றும் இனிப்புப் பலகாரங்களின் விலையைத் தமிழக வெற்றிக் கழக அரசு

7

“8 பேர் அமைச்சர் ஆகிவிட்டதால் மட்டும் அனைத்தும் ஒரே நாளில் மாறிவிடாது” – அமைச்சர் வன்னி அரசு!

October 27, 2026

கோயம்புத்தூர்: சாதிய வன்கொடுமையால் கோவையில் சமீபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவர் அகிலனின் இல்லத்திற்குச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

6

“முதல்வர் ஒரு ஃபைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைது!” – நிர்மல்குமார் பேட்டி!

October 27, 2026

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதில் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் திமுக

5

“அன்பில் மகேஷ் கைது எதிரொலி; இனி வரும் காலம் திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள்..!” – தவெக பதிவு!

October 27, 2026

சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதைத் தொடர்ந்து, இனி வரும் காலம் திமுகவிற்குத் திக் திக் நிமிடங்கள் என்று

4

“திமுக தீய சக்தி என்றால் தவெக கொடிய தீய சக்தி!” – சீமான் கடும் விமர்சனம்!

October 27, 2026

சிவகங்கை: திமுக தீய சக்தி என்றால், ஆளும் தமிழக வெற்றிக் கழகம் ஒரு கொடிய தீய சக்தி என்று நாம்

3

“வெளியில் குற்றவாளிகள்… கைதிகளும் தப்பியோட்டம்” – மு.க.ஸ்டாலின் சாடல்!

October 27, 2026

சென்னை: தேனி மாவட்டச் சிறையில் இருந்து பதினேழு கைதிகள் ஒட்டுமொத்தமாகத் தப்பிச் சென்ற மாபெரும் அதிர்ச்சிச் சம்பவத்திற்குத் திராவிட முன்னேற்றக்

2

“அன்பில் மகேஷ் கைது: மிரட்டலுக்கு திமுக அஞ்சாது” – சேகர்பாபு!

October 27, 2026

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு முறையான அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் நானூறு கோடி ரூபாய் அளவுக்கு மாபெரும் மோசடி

1

“சிறையில் இருந்து தப்பிய மேலும் 8 கைதிகள் சிக்கினர்!” – எஞ்சியுள்ள 4 பேரை தேடும் பணி தீவிரம்!

October 27, 2026

சென்னை: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்டச் சிறையில் இருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளில் மேலும்

Toronto-Election-1536x783

டொராண்டோ மாநகராட்சித் தேர்தல் 2026: நகரசபைக்குத் தேர்வானவர்கள் மற்றும் வெளியேறியவர்களின் முழுமையான பட்டியல்

October 27, 2026

திங்கள்கிழமை நடைபெற்ற டொராண்டோ மாநகராட்சித் தேர்தலில் 7 புதிய கவுன்சிலர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் மூலம் தற்போதைய கவுன்சிலர்கள்