தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளான் மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று (18.10.2026) ஆறாவது வாரமாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் தமது பூர்வீகக் காணிகளை விடுவித்து, அவற்றில் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டங்கள்
இதேவேளை, பலாலி உள்ளிட்ட பகுதிகளில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மற்றும் பலாலி சாந்தி உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.