விழுப்புரம்:
கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
திமுக தவறு:
திண்டிவனம் வண்டிமேடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைக்க வேண்டும் எனத் திமுக நினைத்திருந்தால் அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியும். தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் பேசியதை எப்படி கையாள வேண்டும் எனத் திமுக சிந்தித்து இருக்க வேண்டும்,” என்றார்.
பாமகவுடன் கூட்டணி இல்லை:
“நாங்கள் பேரம் பேசி ஆட்சியில் சேரவில்லை, பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக அமைந்துவிட்டது. பாமக வாக்குகளைத் தவெகவுக்குச் செலுத்தியுள்ளனர் என்று பேசுகிறார்கள். பாமகவும் பாஜகவும் இருக்கும் அணியில் இருக்க மாட்டோம் என 15 ஆண்டுகளாகச் சொல்லி வருகிறோம். விசிக இருக்கும் கூட்டணிக்குப் பாமகவினர் வாக்களிக்க மாட்டார்கள்,” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
#Thirumavalavan #VCK #DMK #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive