‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக, பராசக்தியாக மற்றும் காளியாக உருவகப்படுத்தி வழிபடுவது ஐதீகமாகும்.

நவராத்திரியின் முதல் நாளான இன்று காலையில் எளிய முறையில் ஏதாவது ஒரு பழம் மற்றும் கற்கண்டு ஆகியவற்றைப் படைத்து வழிபாட்டைத் தொடங்கலாம்.

மாலையில் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். முதல் நாள் என்பதால் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் அல்லது சுண்டல் ஆகியவற்றைச் செய்து படைக்கலாம்.

குறிப்பிட்ட மலர்கள் அல்லது நைவேத்தியங்கள் தான் கிடைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது; தமக்கு இயன்றவற்றைக் கொண்டு பக்தி சிரத்தையுடன் வழிபடலாம்.

காலையில் பழங்கள் படைத்து அம்பிகைக்குரிய ஸ்தோத்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி வழிபட வேண்டும்.

மாலையில் குங்குமம் மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்து, அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், துர்காஷ்டகம், காமாட்சி அஷ்டகம் அல்லது 108 அம்பாள் போற்றி மந்திரங்களைச் சொல்லி மனதாரப் பிரார்த்திக்கலாம்.

இறுதியில் தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து, வீட்டிற்கு வருகை தருபவர்களுக்குப் பிரசாதம் மற்றும் தாம்பூலம் வழங்கி மகிழலாம்.

முதல் மூன்று நாட்கள் துர்கா தேவி (பராசக்தி, காளி) வடிவிலான அம்பிகையை வீரியம், தைரியம் மற்றும் தீமைகளை அழிக்கும் சக்தியாகவும் வழிபடுவது வழக்கம்.

அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமி தேவி வடிவில் செல்வம், வளம் மற்றும் அனைத்து வகையான ஐசுவரியங்களையும் வழங்கும் தெய்வமாக அம்பிகையை வழிபட வேண்டும்.

கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவி வடிவில் கல்வி, ஞானம், கலை மற்றும் அறிவுச் செல்வத்தை அருளும் தெய்வமாக அம்பிகையைச் சிறப்புடன் வழிபட வேண்டும்.

குறிப்பாக, நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமி நாளில் கலை, கல்வி மற்றும் தொழிலைத் தொடங்கும் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

நவராத்திரி காலத்தில் பக்திியுடன் அம்பிகையை வழிபட்டால் வாழ்வில் அனைத்து ஐசுவரியங்களும் பெருகும் என்பது ஐதீகமாகும்.

நவராத்திரி என்பது தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் ஒன்பது நாட்கள் திருவிழா ஆகும். இதன் பின்னணியில் உள்ள முக்கிய புராணக் கதை:

மகிஷாசுரன் என்ற எருமைத் தலை அசுரன் பிரம்மாவை நோக்கி கடுமையான தவம் செய்து, ஆண்பால் வடிவங்களால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றான்.

இந்த வரத்தின் பலத்தால் அவன் தேவர்களையும் மனிதர்களையும் துயருறுத்தினான். எந்தவொரு ஆணும் அவனைக் கொல்ல முடியாது என்பதால் தேவர்கள் உதவியின்றித் தவித்தனர்.

மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் சக்திகளை ஒன்றாக இணைத்து ஒரு சக்திவாய்ந்த பெண் தெய்வமான அம்பிகை (துர்கை) தேவியை உருவாக்கினர்.

மூன்று நிலைகள்:

முதல் 3 நாட்கள்: தைம குணங்களை நீக்க துர்க்கை வழிபாடு.

அடுத்த 3 நாட்கள்: ரஜோ குணங்களை வெல்ல மகாலட்சுமி வழிபாடு.

கடைசி 3 நாட்கள்: சத்துவ குணங்களைப் பெற சரஸ்வதி வழிபாடு.

அம்பிகையும் மகிஷாசுரனும் ஒன்பது இரவுகள் கடுமையாகப் போர் புரிந்தனர். பத்தாம் நாளன்று தேவி மகிஷாசுரனை வதம் செய்தாள்.

மகிஷாசுரனை தேவி வென்ற கதை தீமையின் மீது நன்மையின் வெற்றியை குறிக்கும் ஆன்மிக அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

பத்தாம் நாள்: வெற்றியைக் குவிக்கும் விஜயதசமி திருநாள்! நவராத்திரி நிறைவடைந்த அடுத்த நாள் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது.

தெய்வீக கொண்டாட்டம் என்பதால், புராண, இதிகாசங்களின்படி மகிஷன் முதலான அரக்கர்கள் மாய்ந்து அந்த வெற்றியைக் கொண்டாடும் திருநாளாகவும் விஜயதசமி அமைகிறது. அதோடு ஒரு பெண் பூவாகவே இருந்தாலும், அவளும் புயலாக மாறுவாள் என்றும் இந்த சம்பவங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. தற்காலத்தில் சமூகத்தின் நடைபெறும் ஒழுக்கக் கேடுகளை நினைத்தால், பெண்கள் மிகுந்த தைரியசாலிகளாகத் திகழ வேண்டிய அவசியத்தை முன்னிறுத்த வேண்டியிருக்கிறது. இந்த நந்நாள், அம்பிகையின் அருளால் பெண்களுக்கு அத்தகைய மன உறுதியை அளிக்கும் திருநாளாக அமைகிறது.

விஜயதசமி நாளில் அம்மன் வழிபாடு, ஆயுத பூஜை பொருட்களுக்கு மரியாதை, மற்றும் புதிய கல்வி அல்லது தொழிலை தொடங்குவது மிகவும் சிறப்புடையதாகும்.

நவராத்திரியின் 10-வது நாளான விஜயதசமியில் குழந்தைகளை கோவில்களுக்கு அழைத்துச் சென்று அரிசியில் ‘அ’ எழுத வைத்து கல்வியைத் தொடங்கலாம். ஆயுத பூஜையின் போது வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள், எழுதுகோல்கள் மற்றும் தொழில் கருவிகளை எடுத்துப் பயன்படுத்தலாம்.

புதிய தொடக்கங்கள்: இந்த நாளில் எந்தச் செயலைத் தொடங்கினாலும் அது வெற்றியில் முடியும் என்பதால், புதிய தொழில், வேலை அல்லது படிப்பை ஆரம்பிக்கலாம்.

மாணவர்களுக்குப் புத்தகங்கள் அல்லது கல்வி தொடர்பான பொருட்களைத் தானமாக வழங்கலாம். இரும்புத் தளவாடங்கள், தங்கம் அல்லது நிலம், வீடு தொடர்பான முன்னெடுப்புகளைச் செய்யலாம்.

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்