செங்கல்பட்டு:
மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அபார வெற்றி:
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் அபார வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற அவரை அமைச்சர் சரத்குமார் மற்றும் தவெக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
விஜய் முகத்திற்கு வாக்கு:
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மரகதம் குமரவேல், “இத்தனை வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றிருப்பதற்கு முழு காரணம் தமிழக முதலமைச்சர் விஜய்தான். அவரது முகத்திற்காகத்தான் இந்த வாக்குகளை நான் பெற்றுள்ளேன். எதிர்க்கட்சிகள் எவ்வளவு பொய்ப் பிரச்சாரம் செய்தாலும் மக்கள் சிந்தித்து நல்ல தீர்ப்பைக் கொடுத்துள்ளனர்,” என்றார்.
தளபதியின் தங்கச்சி:
“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி. அவருக்கு வந்த நெருக்கடிகளைப் போலவே நாங்களும் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொண்டோம். மக்கள் என்னைத் தங்கள் வீட்டு மகளாக வரவேற்றனர். எம்.ஜி.ஆரின் பாடல் போல் இன்று உண்மைக்கு வெற்றி கிடைத்துள்ளது,” என அவர் பெருமிதத்துடன் கூறினார்.
#MaragathamKumaravel #TVK #CMVijay #Madurantakam #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive