சென்னை:
ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள் என முதலமைச்சர் விஜய்யை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஜனநாயகப் படுகொலை:
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்துத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஐந்தே மாதத்தில் மக்கள் விருப்பத்தை அழித்துவிட்டு இரண்டு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து ஆளுங்கட்சியில் சேர்ந்ததால் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது. இதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடந்தது,” எனத் தெரிவித்துள்ளார்.
கொத்து புரோட்டா:
மேலும், “சினிமா கவர்ச்சியை நம்பி அரசியல் களத்தில் குதித்த விஜய், இந்த இடைத்தேர்தலிலும் ரீல்ஸ் காட்சிகளே கைகொடுக்கும் என்று நம்பினார். 5 நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் வெயிலில் அலைய வைத்து மக்கள் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள்,” என்று அவர் கிண்டலடித்துள்ளார்.
பணபலம் மற்றும் வீழ்ச்சி:
“தேர்தல் தேதிக்குப் பிறகு திட்டங்களை அறிவித்து விதியை மீறியுள்ளனர். ஜிபே மூலம் பணம் கொடுத்ததும், வேட்பாளர் கோடிகளைச் செலவிட்டதாக ஒப்புக்கொண்ட வீடியோவும் தவெகவின் சுயரூபத்தைக் காட்டுகிறது. இந்தத் தற்காலிக வெற்றியால் பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. இனியாவது ரீல்ஸ் எடுப்பதைத் தவிர்த்து மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும்,” என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
#MKStalin #CMVijay #DMK #TVK #Byelection #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive