சென்னை:
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.
மதுராந்தகத்தில் தவெக வெற்றி:
மதுராந்தகம் தொகுதியில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 61,470 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் 43,916 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்பத் 38,770 வாக்குகளும் பெற்றனர்.
தாராபுரத்தில் சத்யபாமா வெற்றி:
தாராபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இங்கு த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகள் பெற்ற நிலையில், சத்யபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.
உற்சாகக் கொண்டாட்டம்:
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். இந்த இடைத்தேர்தல் வெற்றி, கடந்த 4 மாத கால ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
#TVK #Madurantakam #Dharapuram #ByElection #Vijay #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive'”