சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.
நந்தி சிலை:
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமான மேட்டூர் அணை கட்டப்பட்ட போது, அங்கு வசித்த மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். அப்போது அவர்கள் வழிபட்டு வந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ கோபுரங்கள் அங்கேயே விட்டுச் செல்லப்பட்டன. அணையின் நீர்மட்டம் 74 அடிக்குக் கீழ் வரும்போது கிறிஸ்தவ கோபுரமும், 69 அடிக்குக் கீழ் குறைந்தால் நந்தி சிலையும் வெளியே தெரியும்.
நீர்மட்டம் சரிவு:
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67 அடிக்குக் கீழே சரிந்துள்ளதால், பண்ணவாடி நீர்த்தேக்கப் பகுதியில் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலின் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.
#MetturDam #WaterLevel #NandiStatue #SalemNews #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive