சென்னை:
தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுராந்தகம் நிலவரம்:
5ஆம் சுற்றின் முடிவிலும் தவெக தான் 6238 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. தவெக 20067 வாக்குகள், திமுக 13829 வாக்குகள், அதிமுக 11442 வாக்குகள், சிபிஎம் 621 வாக்குகள், நாதக 799 வாக்குகள் பெற்றிருக்கின்றன.
தாராபுரம் நிலவரம்:
எட்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா 21,034 வாக்குகள் பெற்றுள்ளார். முறையே, அ.தி.மு.க-வின் கே. பானுமதி 19,730 – தி.மு.க வேட்பாளர் சுகன்யா 17,898 – நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா 1,632 – கம்யூனிஸ்ட் வேட்பாளர் 298 வாக்குகள் பெற்றுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு:
வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த சுற்று முடிவுகள் வெளிவருவதையொட்டி அரசியல் கட்சியினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
#MadurantakamBypoll #DharapuramBypoll #TVKLeading #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive