முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்ச சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணி அனில் சில்வா சிராந்தி ராஜபக்ச எதிர்கொண்டுள்ள உடல்நல பாதிப்புகள் குறித்து பல தகவல்களை வெளியிட்டார்
அவர் நீதிமன்றத்தில் குறிப்பிடுகையில் தெரிவித்ததாவது
சிராந்தி ராஜபக்ச 2019ம் ஆண்டு முதல் இதயநோய்க்காக சிகிச்சை பெற்றுவருகின்றார்.
2021ம் ஆண்டு சிராந்தியின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மருத்துவர்கள் மருத்துவபரிசோதனைகளை மேற்கொண்டனர்.மேலும் அவர் அடிக்கடி திடீர் தலைச்சுற்று,மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றார்.
சிராந்தி ராஜபக்சவிற்கு முதுகெலும்பு, வெரிகோஸ் பாதிப்புகள் இருப்பதால் அவரால் தனித்து செயற்படவோ நடமாடவோ முடியாது.
மேலும் அவரை சிறையில் அடைத்தால் அது அவருக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி அவரது உயிருக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்பதால் அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு பிணையில் விடுதலை செய்யவேண்டும் என சட்டத்தரணி வேண்டுகோள் விடுத்தார்.
சிராந்திராஜபக்ச கொழும்பு நவலோக மருத்துவமனையில் கண்சிகிச்சை பெற்றுவருவதை அவரது சட்டத்தரணி சுட்டிக்காட்டியதை தொடர்ந்து ஒக்டோபர் 8ம் திகதி சிராந்திராஜபக்சவை மருத்துவபரிசோதனைக்காக குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.