கச்சத்தீவு மற்றும் கடற்தொழில் உரிமைகள்; மீண்டும் பரிசீலிக்கும் எண்ணம் இல்லை!

கச்சத்தீவு மற்றும் கடற்தொழில் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களை மீண்டும் பரிசீலிக்கும் அல்லது திறக்கும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும், இலங்கையுடன் இந்தியா நல்ல இராஜதந்திர உறவுகளைப் பேணி வருவதாகவும் இந்திய மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தங்களை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையிலேயே மத்திய அரசு தனது நிலைப்பாட்டை இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளது.

நீதியரசர்களான சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் ஆஜரான இந்திய சட்டமா அதிபர் ஆர். வெங்கடரமணி, இந்திய மீனவர்கள் தொடர்பான கவலைகளை இந்திய அரசு இராஜதந்திர வழிகள் மூலமாகக் கையாண்டு வருவதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறோ அல்லது அதற்கேற்பச் செயல்படுமாறு இலங்கையைக் கட்டாயப்படுத்தவோ நிர்பந்திக்கவோ முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

1974 ஆம் ஆண்டின் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்குக் கச்சத்தீவு விட்டுக் கொடுக்கப்பட்டதையும், இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைக் கட்டுப்படுத்திய 1976 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தையும் எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின்போதே அவர் இந்த வாதங்களை முன்வைத்தார்.

இந்திய மீனவர்கள் சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டும் தொடர் பிரச்சினை குறித்தும் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என இந்திய அரசு கேட்டுக்கொண்டது.

இந்தியப் பகுதியில் மீன்வளம் கணிசமாகக் குறைந்தமையே, தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என சட்டமா அதிபர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சர்வதேசக் கடல் எல்லையைக் கடக்கக் கூடாது என்பது குறித்து கடற்றொழிலாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடயே, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பி. வில்சன் வாதிடுகையில், 1974 ஆம் ஆண்டின் ஒப்பந்தமானது இந்திய நிலப்பரப்பை வேறு ஒரு நாட்டிற்கு மாற்றியமைப்பதை உள்ளடக்கியது என்பதால், அதற்கு இந்திய அரசியலமைப்பின் முதலாவது அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதையும் அவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

விசாரணையின் போது கருத்துத் தெரிவித்த நீதியரசர் சஞ்சய் குமார், இலங்கையில் பின்பற்றப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் காரணமாக மீன்கள் இலங்கைக் கடற்பரப்பை நோக்கி நகர்வது ஒரு காரணியாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.

2008 ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த மனுக்கள், கச்சத்தீவு இலங்கைக்குக் கையளிக்கப்பட்டதையும் 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட மீன்பிடித் தடைகளையும் சவாலுக்கு உட்படுத்தியுள்ளன.

இந்த ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.

இந்த வழக்கின் மேலதிக விசாரணை தற்போது 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டின் ஒப்பந்தங்களின் அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வச் செல்லுபடித் தன்மையை இந்திய உச்ச நீதிமன்றம் இன்னும் தீர்மானிக்கவில்லை.

a

சிறைச்சாலை விதிமுறைகளின்படி சிறை ஆடை கட்டாயம்!

October 7, 2026

சிறைச்சாலை விதிமுறைகளின்படி, 3 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் சிறைச்சாலையினால் வழங்கப்படும் சிறை ஆடையை அணிந்தே நீதிமன்றத்தில்

an

சர்வதேச தரநிலைகள் 3 வாரங்களில் முழுமையான தயார்நிலை!

October 7, 2026

நிதித் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைத் தடுக்கும் (AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பான இலங்கையின் மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை

kachc

கச்சத்தீவு மற்றும் கடற்தொழில் உரிமைகள்; மீண்டும் பரிசீலிக்கும் எண்ணம் இல்லை!

October 7, 2026

கச்சத்தீவு மற்றும் கடற்தொழில் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களை மீண்டும் பரிசீலிக்கும் அல்லது திறக்கும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும்,

8

“காங்கிரஸ் கூட சேர்ந்தவங்க யாரும் உருப்படவே முடியாது!” – தவெக – காங்கிரஸ் கூட்டணி குறித்துத் தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்!

October 6, 2026

“‘சென்னை: ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதைக் கடுமையாக விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவர்

7

“வைரலாகும் வீடியோ ஜோடிக்கப்பட்டது!” – தேர்தல் செலவு சர்ச்சை குறித்துத் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா அதிரடி விளக்கம்!

October 6, 2026

தாராபுரம்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் பி. சத்தியபாமா, தேர்தல் செலவினங்கள்

6

“செவிலியர்கள் மீதான பாசிச தாக்குதல் கொடூரத்தின் உச்சம்!” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

October 6, 2026

சென்னை: பணி நிரந்தரம், வேலைப் பாதுகாப்பு மற்றும் சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் அறவழியில்

chennai-mtc-bus-viral-video

“பயணிகளை ஆபாசமாகத் திட்டி அட்டகாசம்!” – அரசுப் பேருந்தில் குடிபோதையில் இருந்த இளம் பெண்ணால் பெரும் பரபரப்பு!

October 6, 2026

தமிழ்நாடு: அரசுப் பேருந்து ஒன்றில் மதுபோதையில் ஏறிய இளம் பெண் ஒருவர் சக பயணிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டு அட்டகாசம்

4

“தாராபுரம் தவெக வேட்பாளர் மீது திமுக அதிரடி புகார்!” – ரூ.31 கோடி செலவிட்டதாக வைரலாகும் வீடியோவால் தேர்தல் களத்தில் பரபரப்பு!

October 6, 2026

சென்னை: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் பி. சத்தியபாமா, தேர்தல் செலவினங்களை

3

“இதென்ன தாய்மாமன் தடியடி திட்டமா?” – செவிலியர்கள் கைது நடவடிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

October 6, 2026

சென்னை: பணி நிரந்தரம், வேலைப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டமைக்குத்

2

“100 பவுன் நகையைப் பறிகொடுத்த யூடியூபர் மதுமிதா மீது நகைத்திருட்டு வழக்கு!” – 89 வயது முதியவர் அளித்த புகாரின் பேரில் அதிரடி நடவடிக்கை!

October 6, 2026

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மதுமிதா மீது, 89 வயது முதியவர் ஒருவரிடம் 5 பவுன் தங்க

1

“மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!” – கடந்த தேர்தலை விடக் குறைவு; அக்டோபர் 9-ல் வாக்கு எண்ணிக்கை!

October 6, 2026

“‘சென்னை: தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

839012679_1123462123527488_138327752421248103_n

பாரிஸில் பாரிய தீ விபத்தில் நாவாந்துறையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

October 6, 2026

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் La Courneuve பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், இலங்கைத் தமிழர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக