“‘சென்னை:
ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதைக் கடுமையாக விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், \”காங்கிரஸ் கூட சேர்ந்தவங்க யாரும் உருப்படவே முடியாது\” எனத் தெரிவித்துள்ளார்.
தவெக – காங்கிரஸ் கூட்டணி:
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இதற்கு முன்னதாக எதிர்க்கட்சியாக இருந்தபோதே, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைத் தவெக விமர்சித்திருந்த நிலையில், தற்போதைய இந்த அரசியல் மாற்றம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
தமிழிசை கடும் சாடல்:
இது குறித்துப் பேசியுள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், \”காங்கிரஸை நம்பிச் செல்பவர்கள் யாரும் உருப்பட முடியாது. வேண்டுமானால் இதைத் திமுக காரர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்களை முதுகில் குத்தியவர்கள், தற்போது விஜய்யின் முதுகில் குத்துவதற்கு ரொம்ப நேரம் ஆகாது\” என மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
சட்டம் ஒழுங்குச் சீர்கேடு:
மேலும், தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதாகவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பெரும் ஆட்டம் கண்டுள்ளதாகவும் அவர் தனது பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் அரங்கேறி வரும் பல்வேறு குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டியே அவர் இந்த விமர்சனத்தை முன்