ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் கொழும்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினர் மகிந்தஹகந்தகமவிற்கு துபாய் உட்பட வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பிருந்தமை அவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
ஐஸ்போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவலை தொடர்ந்து செவ்வாய்கிழமை மகிந்த ஹகந்தகம கைதுசெய்யப்பட்டார்.கைதுசெய்யப்
இதனை தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் போது ஹகந்தகம துபாயில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டதை காண்பிக்கும் வீடியோ கைப்பற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வீடியோவில் ஹகந்தகம போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு நெருக்கமானவர்களுடன் காணப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒருவருடன் ஹகந்தகம மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் பதிவும் விசாரணையாளர்களிடம் சிக்கியுள்ளது.
ஹகந்தகம ஐஸ் போதைப்பொருளை பெற்றுக்கொண்ட பின்னர் அதற்கான பணத்தை செலுத்தாதமைக்காக கொலைமிரட்டலுக்கு உள்ளானதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.