முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவிக்காலத்தில் – 2013ம் ஆண்டு மத்தல விமானநிலையத்தினை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பாரிய கடத்தல் நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் கசியத்தொடங்கியுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
2013ம்; ஆண்டு மத்தல விமானநிலையத்தின் ஊடாக மிகப்பெருமளவு தங்கத்தையும் தங்க நகைகளையும் இலங்கைக்குள் கொண்டுவந்தனர்.
மத்தல விமானநிலையத்தில் 2013 ஜூன் 12 ம் திகதி தரையிறங்கிய யுசி827 விமானத்தின் ஊடாகவே தங்கம் மற்றும் தங்க நகைகளை நாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட அம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்ணாண்டோவே இந்த தங்கம் மற்றும் நகைகளை இறக்குமதி செய்தார் என்பது தெரியவந்துள்ளது.
அவ்வேளை நிதியமைச்சராகவும் பணியாற்றிய மகிந்தராஜபக்ச உத்தரவு ரவு பிறப்பித்ததை தொடர்ந்து அதிகாரிகள் தங்கம் மற்றும் தங்க நகைகளை நாட்டிற்குள் கொண்டுவர அனுமதித்தனர்.
நடைமுறைகளை பின்பற்றாமல் வழக்கமான சுங்க பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் தங்கம் மற்றும் தங்க நகைகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு அனுமதிக்குமாறு சுங்க அமலாக்க பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஜகத்வீரவீரவிற்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.