யாழில் 32 வயதுப் பெண், 23 வயது இளைஞரால் வெட்டிக் *கொலை – தாய் மீதும் தாக்குதல் – இறுதியில் புகையிரதத்தில் பாய்ந்து உயிரை*மாய்த்தார்!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞரொருவர், ஒரு பிள்ளையின் தாயான இளம் பெண்ணைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படு*கொலை செய்துள்ளதுடன், அவரது தாயாரையும் படுகாயப்படுத்திவிட்டு, புகையிரதம் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
திங்கட்கிழமை இரவு கோவில் வீதியிலுள்ள குறித்த வீட்டிற்குள் நுழைந்த இளைஞன், அங்கு இருந்த பெண் மீது சரமாரியாகக் கத்தி*வெட்டுத் தாக்குதலை நடத்தியதுடன், அவரது தலைமுடியையும் அறுத்துத் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அத்தோடு, தாக்குதலைத் தடுக்க முற்பட்ட பெண்ணின் தாயார் மீதும் குறித்த இளைஞன் கத்தியால் *வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த தாயார் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற அந்த இளைஞன், அரியாலை பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு தபால் புகையிரதம் (Night Mail Train) முன் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
அடையாளம் காணப்பட்ட விவரங்கள்:
கொல்லப்பட்ட பெண்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமையல் கலைஞரான ஆன் லக்ஷா இக்னேஷியஸ் (வயது 32).
தாக்குதல் நடத்திய இளைஞன்: கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புகழரசன் (வயது 23).
கொலையுண்ட பெண்ணும் குறித்த இளைஞனும் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல நட்சத்திர விடுதியொன்றில் சமையல் பிரிவில் இணைந்து பணியாற்றி வந்துள்ளனர். இளைஞன் தனது சமையற்கலை பயிற்சியை நிறைவு செய்து அங்குப் பயிற்சி சமையல் கலைஞராகக் கடமையாற்றி வந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தடயவியல் காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீவிர சோதனைகளை மேற்கொண்டதுடன், பெண்ணின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காவற்துறையினரின் ஆரம்பக்கட்ட சந்தேகம்:
இருவருக்கும் இடையில் காதல் விவகாரம் ஏதும் இருந்திருக்கலாமா, அதன் பின்னணியில் இக்*கொலை இடம்பெற்றதா என்ற கோணத்தில் காவற்துறையினர் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் கடந்த 2021ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அவர் மறுமணம் செய்துகொள்ளாமல் தனது பெண் குழந்தையுடனும் தாயாருடனும் வசித்து வந்துள்ளார்.
jud

குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு: கோட்டை முன்னாள் நீதவான் மீண்டும் சேவையில்

October 8, 2026

கொழும்பு கோட்டை நீதவானாக கடமையாற்றிய போது இடைநீக்கம் செய்யப்பட்ட கோசல சேனாதீரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் சேவையில்

arr

போலி நிறுவனங்கள் மூலம் $2.5 கோடி வெளிநாட்டுக்கு? மற்றொரு சந்தேகநபர் கைது

October 8, 2026

பொருட்களை இறக்குமதி செய்யாமல் போலி நிறுவனங்கள் மூலம் 2.5 கோடி அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 750 கோடி /

sa

தேசிய சாரணர் ஜம்போரி 2027 ஜனவரி 17 முதல் 23 வரை

October 8, 2026

இலங்கை சாரணர் இயக்கத்தின் 115 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 11 ஆவது தேசிய சாரணர்

man

தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

October 8, 2026

மன்னார் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்

thiththa

தேவேந்திர முனையில் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு கோரி கையெழுத்து சேகரிப்பு

October 8, 2026

பெலவத்தை அலுவலகத்தினால் நாட்டுக்கும் குறிப்பாக புத்த சாசனத்துக்கும் பாரிய அநீதி இழைக்கப்படுவதாகவும், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு

(c)PragMatrix

“முதல்வர் விஜய் எந்த பங்களாவில் தங்குவார் என்பதையும் வேட்புமனுவில் குறிப்பிட வேண்டுமா?” – நீதிமன்றம் சரமாரி கேள்வி!

October 7, 2026

சென்னை: பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யக் கோரித் தொடரப்பட்ட வழக்கில் சென்னை

7

“முதலமைச்சர் விஜய் சார்பாகவே நாங்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறோம்!” – அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமான விளக்கம்!

October 7, 2026

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் நேரடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளிப்பதில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வரும் நிலையில்,

shiranthi are

ரூ. 100 இலட்சம் நிதி முறைக்கேடு வழக்கு.. ஷிரந்தி ராஜபக்‌ஷவிற்கு ஒக். 13 வரை விளக்கமறியல்!

October 7, 2026

முன்னாள் ஜனாபதிதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை

6

“தடையற்ற மின்சாரம் வழங்க 4,500 மெகாவாட் மின்சாரம் அவசர கொள்முதல்!” – அமைச்சர் நிர்மல்குமார் விரிவான விளக்கம்!

October 7, 2026

சென்னை: தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு எவ்வித மின்தடையும் இன்றி தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக, வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட்

5

“மக்களின் குறைகளைக் கேட்டறிந்த முதல்வர் விஜய்!” – பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகம் மற்றும் ஆவின் பால் பண்ணையில் அதிரடி ஆய்வு!

October 7, 2026

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (அக்டோபர் 07) சென்னை, மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணை

photo-collage.png

விளக்கமறியலுக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஷிரந்தி ராஜபக்‌ஷ!

October 7, 2026

முன்னாள் ஜனாபதிதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை

vikatan_2024-03_d14ec0b8-45e1-4c26-ab54-a25204a35835_GE1xMcEWkAAmNSf

“ஞானேஷ்குமார் தலைமையில் நடந்த தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்!” – தேர்தல் ஆணையம் மீது சீமான் கடும் பாய்ச்சல்!

October 7, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற தேர்தல்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என நாம்