விளக்கமறியலுக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஷிரந்தி ராஜபக்‌ஷ!

முன்னாள் ஜனாபதிதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் இன்று (07) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவருக்கு இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவருமான பிரதீப் காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலா ரூ. 10 மில்லியன் கொண்ட 2 சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

ஷிரந்தி ராஜபக்‌ஷவினால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட, சிரிலிய சவிய எனும் அமைப்பு தொடர்பில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பில், இலஞ்ச ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (07) காலை அவர் கைது செய்யப்பட்டார்.

கிருலப்பனையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த விடயம் தொடர்பில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

‘சிரிலிய சவிய’ (Siriliya Saviya) நிதியத்துடன் தொடர்புடைய கணக்கு ஒன்றின் ஊடாக அரசுக்குச் சொந்தமான வங்கி ஒன்றிலிருந்து ரூ. 10 மில்லியன் நிதியைப் பெற்றமை மற்றும் அதனை முறைகேடாகப் பயன்படுத்தியமை, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் (FCID) அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக செல்வதாக கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி சிங்கப்பூர் சென்றிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, ஒக்டோபர் 05 ஆம் திகதி இரவு மலேசியாவிலிருந்து MH 179 விமானம் மூலம் இலங்கை திரும்பினார்.

இந்நிலையில், ‘சிரிலிய சவிய’ வழக்கு விசாரணைகளில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி, ஒக்டோபர் 05 ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் அவர் சார்பில் அவரது சட்டத்தரணிகளாலும் முன்பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அது குறித்து எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி விளக்கமளிக்குமாறு FCID பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இதேவேளை, சிரிலிய நிதி மோசடி தொட்பில் வாக்குமூலம் வழங்க, ஒக்டோபர் 13 ஆம் திகதி ஆஜராகுமாறு பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) நேற்று முன்தினம் (05) ஷிரந்தி ராஜபக்‌ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலைமையிலேயே ஷிரந்தி ராஜபக்‌ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(c)PragMatrix

“முதல்வர் விஜய் எந்த பங்களாவில் தங்குவார் என்பதையும் வேட்புமனுவில் குறிப்பிட வேண்டுமா?” – நீதிமன்றம் சரமாரி கேள்வி!

October 7, 2026

சென்னை: பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யக் கோரித் தொடரப்பட்ட வழக்கில் சென்னை

7

“முதலமைச்சர் விஜய் சார்பாகவே நாங்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறோம்!” – அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமான விளக்கம்!

October 7, 2026

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் நேரடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளிப்பதில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வரும் நிலையில்,

shiranthi are

ரூ. 100 இலட்சம் நிதி முறைக்கேடு வழக்கு.. ஷிரந்தி ராஜபக்‌ஷவிற்கு ஒக். 13 வரை விளக்கமறியல்!

October 7, 2026

முன்னாள் ஜனாபதிதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை

6

“தடையற்ற மின்சாரம் வழங்க 4,500 மெகாவாட் மின்சாரம் அவசர கொள்முதல்!” – அமைச்சர் நிர்மல்குமார் விரிவான விளக்கம்!

October 7, 2026

சென்னை: தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு எவ்வித மின்தடையும் இன்றி தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக, வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட்

5

“மக்களின் குறைகளைக் கேட்டறிந்த முதல்வர் விஜய்!” – பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகம் மற்றும் ஆவின் பால் பண்ணையில் அதிரடி ஆய்வு!

October 7, 2026

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (அக்டோபர் 07) சென்னை, மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணை

photo-collage.png

விளக்கமறியலுக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஷிரந்தி ராஜபக்‌ஷ!

October 7, 2026

முன்னாள் ஜனாபதிதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை

vikatan_2024-03_d14ec0b8-45e1-4c26-ab54-a25204a35835_GE1xMcEWkAAmNSf

“ஞானேஷ்குமார் தலைமையில் நடந்த தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்!” – தேர்தல் ஆணையம் மீது சீமான் கடும் பாய்ச்சல்!

October 7, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற தேர்தல்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என நாம்

1200-675-27807404-thumbnail-16x9-gh-covai

“அரசு மருத்துவமனை மருந்து உறைகளில் இந்தி!” – திமுகவின் குற்றச்சாட்டுக்குத் தவெக அரசின் அதிரடிப் பதிலடி!

October 7, 2026

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளின் உறைகளில் இந்தி மொழி அச்சிடப்பட்டிருப்பதற்குத் திமுக கடும் கண்டனம் தெரிவித்திருந்த

ez2sa2rn-tile-1706687351 (1)

“தீபாவளிக்கு முன் கிலோ ரூ.100-ஐ எட்டும் அரிசி விலை!” – பொதுமக்கள் அதிர்ச்சி; விலை உயர்வுக்கான காரணம் என்ன?

October 7, 2026

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், வரவிருக்கும்

newproject-2026-07-28t081547-409-40861785206817

“விஜய்யைத் தொடர்ந்து அரசியலில் குதிக்கும் தனுஷ்!” – ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சி பதிவு!

October 7, 2026

சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், ‘தமிழக எழுச்சிக் கழகம்’ (Thamizhaga Ezhuchi Kazhagam) என்ற பெயரில் புதிய

anojan

சிறையில் கைதியுடன் மோதல் – அனோஜனிற்கு முகத்தில் காயங்கள் – விஜித ஹேரத்

October 7, 2026

சவுதி அரேபிய சிறையில் அனோஜனிற்கும் மற்றுமொருகைதிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அனோஜனின் முகத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார

rohitha bogilla

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம கைது

October 7, 2026

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்