தாராபுரம்:
பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடுவது வெட்கக்கேடான செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சீமான் கடும் சாடல்:
தாராபுரம் தனிச் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். வேட்பாளர் சத்தியபாமா, சாவித்திரி மற்றும் விஜய்யின் நடிப்பையே மிஞ்சிவிட்டதாக அவர் கடுமையாக விமர்சித்தார்.
வெற்று அறிவிப்புகள்:
தவெக அரசின் அனைத்து அறிவிப்புகளும் வெற்று அறிவிப்புகளாகவே உள்ளதாகக் குற்றம் சாட்டிய சீமான், கடும் கடன் சுமையில் உள்ள தமிழகத்தில் இலவசத் திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
இலவச மின்சாரம் இல்லை:
200 யூனிட் இலவச மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது மின்வெட்டை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சாடினார். நா.த.க ஆட்சியில் இலவச மின்சாரம் கிடையாது, ஆனால் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் எனவும், வாக்காளர்களுக்கு அதிகப் பணம் கொடுப்பது தவெக தான் எனவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
#Seeman #NTK #Dharapuram #TNPolitics #ByElection #TVK #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive