முல்லையில் வனஇலாக மற்றும் வனஜீவராசிகளின் பிடியிலுள்ள 17,469.58ஹெக்டயர் காணிகளை விடுவிக்க வியுறுத்திய – ரவிகரன் எம்.பி; மக்கள் மீது குண்டுகளைவீசிய கோட்டாவிடம் ஆவணங்களைக் கோருமாறும் தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் கையகப்படுத்தலில் இருந்து விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58ஹெக்டயர் காணிகள், மக்களிடமிருந்து ஆவணங்கள் கோரப்படாமல் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு காணிகளுக்குரிய ஆவணங்களைக் கோருவதானால், யுத்தத்தை நடாத்தி மக்கள்மீது குண்டுகளைப்போட்டு, மக்களை அகதிகளாக ஓடச்செய்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜயபக்சவிடமும் அவர்களுடைய சகாக்களிடமும் ஆவணங்களைக் கோருமாறும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், யுத்தத்தினை நடாத்தியமைக்காக கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக […]
தையிட்டி விகாரையை சூழ தனியார் காணியில் புதிய கட்டுமானங்கள்

தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியார் காணியில் மேலும் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அதனை நேரில் பார்வையிடச் சென்ற பிரதேச சபை உறுப்பினர்களுக்கு காணிக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் இடம்பெறும் புதிய கட்டுமானங்கள் தொடர்பில் தகவல் அறிந்த பிரதேச சபை உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை பார்வையிட முயன்றுள்ளனர். எனினும், காணிக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். குறித்த கட்டுமானப் […]
பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?

நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட பாம் எண்ணெய் (Palm Oil) இறக்குமதித் தடையை மீண்டும் நீக்குவதற்கு சில தரப்புகள் ஆயத்தமாகி வருவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். பாம் எண்ணெய் இறக்குமதி மீதான தடையை எக்காரணம் கொண்டும் நீக்க வேண்டாம் என அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அவர் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் நேற்று (2) […]
மின்கம்பம் நடச் சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

கடவத்தை – மன்கட வீதி பகுதியில் உயர் அழுத்த மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் மின் கம்பமொன்றை சீரமைக்க முயன்ற நான்கு மின்சார ஊழியர்கள் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரு ஊழியர்கள் பலத்த காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தியாகதீபம் திலீபனின் சிலையை ஏற்க நீதவான் நீதிமன்றம் மறுப்பு!

நல்லூர் நினைவாலயத்தில் இருந்து காவற்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்ட தியாகதீபம் தி*லீபனின் திருவுருவச் சிலையை நீதிமன்றம் பொறுப்பேற்க மறுத்ததைத் தொடர்ந்து, அச்சிலையை காவற்துறையினர் மீண்டும் காவல் நிலையத்திற்கே எடுத்துச் சென்றுள்ளனர். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, காவற்துறையினர் சிலையை மன்றில் ஒப்படைக்க முற்பட்டனர். எனினும், சிலையை அங்கு நிறுவியவர்கள் யார், அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் போன்ற எந்தவித அடிப்படைத் தகவல்களும் இன்றி, சிலையை மட்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடியாது […]
நினைவேந்தும் உரிமையை உறுதிப்படுத்துங்கள்..ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு 15 பொது அமைப்புக்கள் கூட்டாக மகஜர்.

தியாகதீபம் நினைவேந்தும் உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்க்கர் டுர்க்கிடம் 15 பொது அமைப்புக்கள் கையெழுத்திட்ட மகஜர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிராந்தியக் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது. குறித்த மஜகரில் தெரிவிக்கப்பட்டதாவது தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானித்துக்கொள்வதற்கான மக்களின் சுயநிர்ணய உரிமை சர்வதேச மனித உரிமைச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமையாகும். சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் (ICCPR) பிரிவு 1, அனைத்து […]
சிவராசா அனோஜனை விடுவிக்க அரச தலையீடு கோரி ஜனாதிபதியிடம் மகஜர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமாஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அதற்கமைய, இலங்கை ராமாஞ்ஞ பீடத்தின் மகாநாயக்க அக்கமகா பண்டித அதிவணக்கத்திற்குரிய மகுலேவே விமல நாயக்க தேரர் மற்றும் அமரபுர பீடத்தின்மகாநாயக்க கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி மகா நாயக்க தேரர் ஆகியோரினால் அனுப்பப்பட்டுள்ள குறித்த மகஜர், தென்னிலங்கை பிரதான சங்கநாயக்க கலாநிதி […]
யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய போக்குவரத்து நிலைமையை ஆய்வு செய்து, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தியை திட்டமிடுவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து ஆய்வை தற்போதைய நிலைமை, மக்கள் தொகை, நகர வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ப மீளாய்வு செய்து புதுப்பிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. கலந்துரையாடப்பட்ட முக்கிய அம்சங்கள்: ஒருங்கிணைந்த பல்முகப் போக்குவரத்து அமைப்பு (Multimodal Transport System) உருவாக்குதல். புதிய […]
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் சட்ட அமுலாக்கல் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்குகின்றது – மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் சட்ட அமுலாக்கல் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்குகின்றது – மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் பொலிஸ் மற்றும் சட்ட அமுலாக்கல் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்கும் நடைமுறையை தொடர்கின்றது என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் செப்டம்பர் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்டமூலம் குறித்து தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுகின்றது. 2026ம் ஆண்டின் அரசை […]
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே தரித்து நிற்கும் ஈரானிய கப்பல்கள் – இலங்கைக்கு இராஜதந்திர கடல்சார் நெருக்கடி – அமெரிக்க ஊடகம்

ஈரானிற்கு திரும்பி செல்ல முடியாத நிலையில் அந்த நாட்டை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்கு கரையோரத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்காவை சேர்ந்த வோல்ஸ்ரீட் ஜேர்னல் இந்த கப்பல்கள் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன கப்பலில் உள்ளவர்கள் போதிய குடிநீர் மற்றும் உணவு இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் மேலும் தெரிவித்துள்ளதாவது ஈரான் எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனா போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாக எரிபொருளை கொண்டு […]