நினைவேந்தும் உரிமையை உறுதிப்படுத்துங்கள்..ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு 15 பொது அமைப்புக்கள் கூட்டாக மகஜர்.

தியாகதீபம் நினைவேந்தும் உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்க்கர் டுர்க்கிடம் 15 பொது அமைப்புக்கள் கையெழுத்திட்ட மகஜர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிராந்தியக் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது.
குறித்த மஜகரில் தெரிவிக்கப்பட்டதாவது தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானித்துக்கொள்வதற்கான மக்களின் சுயநிர்ணய உரிமை சர்வதேச மனித உரிமைச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமையாகும்.
சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் (ICCPR) பிரிவு 1, அனைத்து மக்களுக்கும் தமது அரசியல் நிலையைச் சுதந்திரமாகத் தீர்மானித்துக்கொள்வதற்கும், தமது பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை முன்னெடுப்பதற்குமான சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்துகின்றது.
இலங்கையில் தமிழ் மக்களும் தமது அரசியல் உரிமைகள் மற்றும் அரசியல் எதிர்காலம் தொடர்பான கோரிக்கைகளை வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வழிமுறைகளில் வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
அவற்றுள் அகிம்சை வழியிலான அரசியல் போராட்டமும் முக்கியமான ஓர் அங்கமாக அமைந்துள்ளது. அதன் குறிப்பிடத்தக்க வரலாற்று அடையாளங்களில் ஒருவராகவே தியாகதீபம் தமிழ் மக்களின் கூட்டு நினைவில் நிலைத்திருக்கின்றார்.
1987 ஆம் ஆண்டு, இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரம் மற்றும் உணவு எதனையும் உட்கொள்ளாது மேற்கொண்ட உண்ணாநோன்புப் போராட்டம் அவரது உயிரிழப்புடன் முடிவடைந்தது.
தனது அரசியல் கோரிக்கைகளை ஆயுதமின்றி, தனது உடலையே போராட்டத்தின் ஊடகமாக்கி வெளிப்படுத்திய இந்நிகழ்வு தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றிலும் கூட்டு நினைவிலும் ஆழமான இடத்தைப் பெற்றுள்ளது.
உலகிற்கு அகிம்சைப் போராட்டத்தின் வலிமையை எடுத்துக்காட்டிய மகாத்மா காந்தியின் தேசமான இந்தியாவின் அமைதிப்படையிடம் முன்வைக்கப்பட்ட இந்த அகிம்சை வழிப் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது.
அதனாலேயே தியாகதீபம் தமிழ் மக்கள் நீண்டகாலமாக நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்த நினைவேந்தல் என்பது தனிநபர் ஒருவரை நினைவுகூரும் செயற்பாடு மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் கூட்டு நினைவு, வரலாறு, அரசியல் வெளிப்பாடு மற்றும் பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றுடனும் தொடர்புடையதாகும்.
அமைதியான நினைவேந்தல் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தால் பாதுகாக்கப்படும் பல்வேறு உரிமைகளுடன் தொடர்புடையவை.
மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் (UDHR) பிரிவுகள் 19 மற்றும் 20, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் அமைதியான ஒன்றுகூடல் உரிமையையும் அங்கீகரிக்கின்றன.
அதேபோன்று, இலங்கையும் அரசுத் தரப்பாக உள்ள ICCPR-இன் பிரிவுகள் 19 மற்றும் 21, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் அமைதியான ஒன்றுகூடல் உரிமையையும் பாதுகாக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் General Comment No. 37 அமைதியான ஒன்றுகூடல் உரிமையின் பாதுகாப்பையும், அதன்மீதான கட்டுப்பாடுகள் சட்டபூர்வமானவையாகவும் அவசியமானவையாகவும் அளவானவையாகவும் இருக்க வேண்டியதையும் வலியுறுத்துகின்றது.
மேலும், கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் மோதல்களுக்குப் பிந்தைய சூழல்களில் நினைவுகூரல் (Memorialization) என்பது உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதங்களுடன் தொடர்புடைய முக்கியமான செயல்முறையாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பொறிமுறைகளால் அணுகப்பட்டுள்ளது.
எனவே, அமைதியான நினைவேந்தலை அரசினால் வழங்கப்படும் ஒரு “அனுமதி” அல்லது “சலுகை” என்ற அடிப்படையில் மட்டும் அணுக முடியாது; அது கருத்து வெளிப்பாடு, அமைதியான ஒன்றுகூடல் மற்றும் கூட்டு நினைவு ஆகிய மனித உரிமைகளின் அடிப்படையில் அணுகப்பட வேண்டும்.
இந்தப் பின்னணியில், தியாகதீபம் நினைவாலயம் தொடர்பான அரச நிர்வாகப் பின்னணியும் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குறித்த நினைவாலயத்தை அமைப்பதற்காக இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அரச நிதி ஒதுக்கப்பட்டு, உரிய அரச நிர்வாக நடைமுறைகளின் ஊடாக அந்நிதி விடுவிக்கப்பட்டு, அதனைப் பயன்படுத்தியே குறித்த நினைவாலயம் மீள்நிர்மாணப் பணிகளின் ஆவண ஆதாரங்கள் காணப்படுகின்றன.
எனவே, குறித்த நினைவாலயம் அரச நிர்வாக நடைமுறைகளுக்கு முற்றிலும் புறம்பாக உருவாக்கப்பட்ட ஒன்றாக மட்டும் சித்தரிக்கப்பட முடியாது.
இத்தகைய பின்னணியில், தமிழ் மக்களின் கூட்டு நினைவில் அகிம்சை வழிப் போராட்டத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் தியாகதீபம் திலீபனின் திருவுருவச்சிலை குறித்த நினைவாலயத்திலிருந்து அகற்றப்பட்டமை, தமிழ் மக்களின் நினைவு, அரசியல் வெளிப்பாடு மற்றும் அமைதியான நினைவேந்தல் உரிமைகள் தொடர்பில் தீவிரமான கவலையை ஏற்படுத்துகின்றது.
அதேவேளை, தமிழ் மக்கள் கடந்த காலங்களில் தமது நினைவேந்தல்களை எவ்வித தடைகளுமின்றி மேற்கொண்டனர் என்ற தோற்றத்தையும் உருவாக்கக்கூடாது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்கள், கண்காணிப்புகள், தடைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்த அச்சங்களுக்கு மத்தியிலேயே தமிழ் மக்கள் நினைவேந்தல்களை முன்னெடுத்து வந்ததாக மனித உரிமை அமைப்புகளும் பாதிக்கப்பட்ட சமூகங்களும் தொடர்ச்சியாகக் கூறிவந்துள்ளன.
எனவே, எமது கோரிக்கை கடந்த காலத்தில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ஓர் “அனுமதியை மீண்டும் வழங்குங்கள்” என்பதல்ல. மாறாக, தமிழ் மக்கள் தமது இறந்தவர்களையும், தமது வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றவர்களையும், தமது கூட்டு வரலாற்று அனுபவங்களையும் அச்சுறுத்தல், கண்காணிப்பு, தேவையற்ற தலையீடு மற்றும் தடைகள் இன்றி அமைதியாகவும் சுதந்திரமாகவும் நினைவுகூரக்கூடிய மனித உரிமைச் சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.
ஆகவே, தியாகதீபம் திருவுருவச்சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறும், தமிழ் மக்களின் அமைதியான நினைவேந்தல் உரிமை மதிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும், ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், சம்பந்தப்பட்ட ஐ.நா. விசேட நடைமுறைகள், சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றை விநயமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பாக, நினைவேந்தல்களின் போது அச்சுறுத்தல், கண்காணிப்பு மற்றும் தேவையற்ற தலையீடுகள் இடம்பெறாத சூழலை உறுதிப்படுத்தவும்; அமைதியான நினைவேந்தல்களின் மீதான எந்தவொரு கட்டுப்பாடும் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் சட்டபூர்வத்தன்மை, அவசியம் மற்றும் அளவுத்தன்மை ஆகிய நியமங்களுக்கு உட்பட்டதாக இருப்பதை உறுதிப்படுத்தவும்.
அகற்றப்பட்ட தியாகதீபம் திருவுருவச்சிலையை அதன் நினைவாலயத்தில் மீள நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகின்றோம்.
நினைவேந்தல் என்பது அரசினால் வழங்கப்படும் ஒரு சலுகையாக மட்டும் அணுகப்பட வேண்டியதல்ல; அது கருத்து வெளிப்பாடு, அமைதியான ஒன்றுகூடல் மற்றும் ஒரு சமூகத்தின் கூட்டு நினைவு ஆகிய மனித உரிமைகளுடன் நெருங்கிய தொடர்புடையதாகும்.
தமிழ் மக்கள் தமது வரலாற்றையும் நினைவுகளையும் அச்சமின்றி, அமைதியாகவும் சுதந்திரமாகவும் நினைவுகூரக்கூடிய சூழலை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
இவ்விடயத்தில் தங்களது தலையீடும் தொடர்ச்சியான அவதானிப்பும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு முக்கியமான பங்களிப்பாக அமையும் என நம்புகிறோம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ravi ka

முல்லையில் வனஇலாக மற்றும் வனஜீவராசிகளின் பிடியிலுள்ள 17,469.58ஹெக்டயர் காணிகளை விடுவிக்க வியுறுத்திய – ரவிகரன் எம்.பி; மக்கள் மீது குண்டுகளைவீசிய கோட்டாவிடம் ஆவணங்களைக் கோருமாறும் தெரிவிப்பு

October 3, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் கையகப்படுத்தலில் இருந்து விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58ஹெக்டயர் காணிகள், மக்களிடமிருந்து

thyity

தையிட்டி விகாரையை சூழ தனியார் காணியில் புதிய கட்டுமானங்கள்

October 3, 2026

தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியார் காணியில் மேலும் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அதனை நேரில் பார்வையிடச்

ol

பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?

October 3, 2026

நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட பாம் எண்ணெய் (Palm Oil) இறக்குமதித் தடையை மீண்டும்

ele dea

மின்கம்பம் நடச் சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

October 3, 2026

கடவத்தை – மன்கட வீதி பகுதியில் உயர் அழுத்த மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் மின் கம்பமொன்றை சீரமைக்க முயன்ற நான்கு

Thileepan

தியாகதீபம் திலீபனின் சிலையை ஏற்க நீதவான் நீதிமன்றம் மறுப்பு!

October 3, 2026

நல்லூர் நினைவாலயத்தில் இருந்து காவற்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்ட தியாகதீபம் தி*லீபனின் திருவுருவச் சிலையை நீதிமன்றம் பொறுப்பேற்க மறுத்ததைத் தொடர்ந்து, அச்சிலையை

831036224_1818053859225569_307152235752109545_n

நினைவேந்தும் உரிமையை உறுதிப்படுத்துங்கள்..ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு 15 பொது அமைப்புக்கள் கூட்டாக மகஜர்.

October 3, 2026

தியாகதீபம் நினைவேந்தும் உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்க்கர் டுர்க்கிடம் 15 பொது அமைப்புக்கள் கையெழுத்திட்ட

835305667_2317527792401858_3220281225120066407_n

சிவராசா அனோஜனை விடுவிக்க அரச தலையீடு கோரி ஜனாதிபதியிடம் மகஜர்

October 3, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமாஞ்ஞ மற்றும்

830513047_29564978313091031_2672284072323348658_n

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

October 3, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய போக்குவரத்து நிலைமையை ஆய்வு செய்து, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தியை திட்டமிடுவது

PTAaa

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் சட்ட அமுலாக்கல் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்குகின்றது – மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்

October 3, 2026

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் சட்ட அமுலாக்கல் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்குகின்றது – மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள அரசை

2026-06-12T162655Z_1108486870_RC2B2KAIG5FQ_RTRMADP_3_IRAN-CRISIS-OIL-WORKAROUNDS

இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே தரித்து நிற்கும் ஈரானிய கப்பல்கள் – இலங்கைக்கு இராஜதந்திர கடல்சார் நெருக்கடி – அமெரிக்க ஊடகம்

October 3, 2026

ஈரானிற்கு திரும்பி செல்ல முடியாத நிலையில் அந்த நாட்டை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்கு கரையோரத்திற்கு

court-judge-hammer-gavel-696x398

சட்டரீதியான தடைகள் நீக்கம் – எதிர்வரும் நாட்களில் வழக்குகளில் வேகம் அதிகரிக்கும் கைதுகள் இடம்பெறும் என அதிகாரிகள் தகவல்

October 3, 2026

சட்டரீதியான தடைகள் மற்றும் நிர்வாக தாமதங்கள் நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு

830232954_2068996867082465_3939976832670644094_n

பாதுகாப்பையும் கல்வியையும் உறுதிசெய்யுங்கள் – புங்குடுதீவு மாணவர்கள் கவனயீர்ப்பு பேரணி!

October 3, 2026

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புங்குடுதீவு மகா வித்தியாலய