புதிய பயங்கரவாத தடைச்சட்டம் சட்ட அமுலாக்கல் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்குகின்றது – மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் சட்ட அமுலாக்கல் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்குகின்றது – மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் பொலிஸ் மற்றும் சட்ட அமுலாக்கல் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்கும் நடைமுறையை தொடர்கின்றது என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் செப்டம்பர் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்டமூலம் குறித்து தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுகின்றது. 2026ம் ஆண்டின் அரசை […]
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே தரித்து நிற்கும் ஈரானிய கப்பல்கள் – இலங்கைக்கு இராஜதந்திர கடல்சார் நெருக்கடி – அமெரிக்க ஊடகம்

ஈரானிற்கு திரும்பி செல்ல முடியாத நிலையில் அந்த நாட்டை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்கு கரையோரத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்காவை சேர்ந்த வோல்ஸ்ரீட் ஜேர்னல் இந்த கப்பல்கள் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன கப்பலில் உள்ளவர்கள் போதிய குடிநீர் மற்றும் உணவு இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் மேலும் தெரிவித்துள்ளதாவது ஈரான் எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனா போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாக எரிபொருளை கொண்டு […]
சட்டரீதியான தடைகள் நீக்கம் – எதிர்வரும் நாட்களில் வழக்குகளில் வேகம் அதிகரிக்கும் கைதுகள் இடம்பெறும் என அதிகாரிகள் தகவல்

சட்டரீதியான தடைகள் மற்றும் நிர்வாக தாமதங்கள் நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கும் செய்யும் நடவடிக்கைகள் இந்த மாதத்தில் தீவிரமடையவுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது எதிர்வரும் நாட்களில் இந்த வழக்குகளில் கூடிய வேகத்தை பொதுமக்கள் காணமுடியும். கைதுகளில் ஈடுபடுவதற்கான சட்டத்தடைகளை நாங்கள் நீக்கியுள்ளோம். சில நிர்வாக பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம் அவற்றிற்கு விரைவில் தீர்வை […]
பாதுகாப்பையும் கல்வியையும் உறுதிசெய்யுங்கள் – புங்குடுதீவு மாணவர்கள் கவனயீர்ப்பு பேரணி!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்றது. புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான பேரணி, நடைபவனியாக பெருங்காட்டு சிவன் ஆலயம் வரை சென்று நிறைவடைந்தது. இதன்போது பங்கேற்ற மாணவர்கள், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், கல்விக்கு முன்னுரிமை வழங்குதல், தீவகப் பகுதிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை […]
நல்லூரில் தியாக தீபம் திலீபன் சிலை விவகாரம் : 8 பேரிடம் வாக்குமூலம்

நல்லூர் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அவரது உருவாச்சிலையை வைத்தமை தொடர்பில் சுமார் எட்டு பேரிடம் யாழ்ப்பாண குற்ற தடுப்பு பிரிவினர் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் புதிதாக சிலை ஒன்று வைக்கப்பட்டது. குறித்த சிலையானது கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸாரால் எடுத்து செல்லப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே யாழ்ப்பாண மாநகர முதல்வர் மற்றும் […]
தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட வௌரலி, போட்மோர், மோனிங்டன் மே பிரிவு, மோனிங்டன் கீழ் பிரிவு மற்றும் ஆட்லி ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,700 ரூபாய் சம்பளம் எவ்வித பிரச்சினைகளுமின்றி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை தினங்களில் தொழில் செய்வோருக்கு கைகாசு அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என்றும் […]
மஸ்கெலியாவில் மூத்தோர் கௌரவிப்பு!

சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் தமது வாழ்க்கையின் பல தசாப்தங்களை அர்ப்பணித்த நூறு மூத்த பிரஜைகளை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வு, சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினமான கடந்த முதலாம் திகதி முன்னிட்டு மஸ்கெலியா குடா மஸ்கெலிய பௌத்த நிலைய வளாகத்தில் நடைபெற்றது. குடா மஸ்கெலிய கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு சர்வமத அனுஷ்டானங்கள் மற்றும் தர்மப் போதனையுடன் ஆரம்பமானது. நிகழ்வில் கலந்துகொண்ட மூத்த பெண்மணி 99 வயதுடையவராவார். கடந்த காலத்தில் ஸ்ரீ பாத யாத்திரைக்கு வருகை […]
மன்னார் பஜாரில் திருட்டு!

மன்னார் பஜார் பகுதியில் உள்ள நான்கு வர்த்தக நிலையங்களில் ஒரே நேரத்தில் இரு திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். இரண்டு நகைக்கடைகள் மற்றும் இரண்டு ஆடை விற்பனை நிலையங்களிலேயே இவர்கள் இவ்வாறு திருட்டில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வர்த்தக நிலையங்களின் கூரையைப் பிரித்துக்கொண்டு உள்ளே இறங்கிய திருடர்கள், இந்தத் திருட்டுச் சம்பவத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை வர்த்தக நிலையங்களைத் திறந்து பார்த்த போதே, கடைகளுக்குள் திருடர்கள் நுழைந்த விஷயம் உரிமையாளர்களுக்குத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நகைக்கடை மற்றும் ஆடை […]
இன்றும் பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா, வடமேல், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும், மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கங்கள் மற்றும் […]