தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் (அக்டோபர் 4) ஓய்கிறது.
வாக்கு சேகரிப்பில் தீவிரம்:
எதிர்வரும் அக்டோபர் 6 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
5 முனைப் போட்டி:
இந்த இரு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவுவதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள்:
நாளை மாலையுடன் பொதுப் பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில், வெளி நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 9 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
#Madurantakam #Dharapuram #ByElection2026 #TNPolitics #ElectionCampaign #TVK #DMK #NTK #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive