முல்லையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை; 34 இறங்கு துறைகளையும், நாயாறு களப்பையும் எல்லைப்படுத்த முடிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் முல்லைத்தீவிலுள்ள 34கடற்றொழில் இறங்குதுறைகளையும், நாயாறு கடல் நீரேரியினையும் எல்லைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்தில் 28.09.2026அன்று இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளநிலையில், அத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 41கடற்றொழில் இறங்குதுறைகளையும், கொக்கிளாய், நாயாறு, நந்திக்கடல் ஆகிய களப்புக்களையும் எல்லைப்படுத்துவதற்கு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் கடந்த 20.09.2026ஆம் திகதி இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அனுமதியைக் கோரியிருந்தது.
இந்நிலையில் இறங்குதுறைகள் மற்றும் களப்புக்களை எல்லைப்படுத்துவதுதொடர்பில், கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் விசேடகூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டு, அந்தக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் முடிவுகளை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.
அதற்கமைய கடந்த 28.09.2026அன்று இஞம்பெற்ற குறித்த விசேட கூட்டத்தில் கரைவலைப்பாடுகளுடன், எல்லைப்பிணக்கு காணப்படும் 07 இறங்குதுறைகளைத் தவிர மிகுதி 34இறங்குதுறைகளை எல்லைப்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
அத்தோடு கரைவலை உரிமையாளர்கள் மற்றும் கடற்றொழில் சங்கங்களுடன் கலந்துரையாடி மிகுதி 07இறங்குதுறைகளையும் அனஎல்லைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதெனவும் இதன்போது முடிவெடுக்கப்பட்டது.
அதேவேளை நாயாறு களப்பினை எல்லைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கொக்கிளாய் மற்றும் நந்திக்கடல் களப்புக்களின் அருகோடு தனியார் காணிகளும் இருப்பதால் அதுதொடர்பில் உரியதரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அதன்பின்னர் கொக்கிளாய் மற்றும் நந்திக்கடல் களப்புக்களை எல்லைப்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இந்த விசேட கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செ.திலகநாதன், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
van

வங்கதேசத்தில் கால்வாயில் மிதந்து வந்த டிரம்மில் இருந்து இந்து மதத்தை சேர்ந்தவரின் உடல் மீட்பு

October 2, 2026

வங்கதேசத்தில் கால்​வா​யில் மிதந்த டிரம்​மில் இருந்து இந்து மதத்​தைச் சேர்ந்​தரின் உடல் கண்​டெடுக்​கப்​பட்ட சம்​பவம் கடும் அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது.

download

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா 2026!

October 2, 2026

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா கடந்தவாரம் யாழ். முற்றவெளியில் ஆரம்பமாகி யாழ் நகரின் வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. இப்பகுதியின் பாரம்பரிய

WhatsApp Image 2026-10-02 at 09.10.41

சாகித்யம் நுண்கலைக் கழகத்தில் புதிய மாணவர் சேர்க்கை

October 2, 2026

கொழும்பு, வெள்ளவத்தையில் கர்நாக சங்கீத ஆசிரியை திருமதி சாகித்யா கஜமுகனால் நிர்வகிக்கப்பட்டுவரும் சாகித்யம் நுண்கலைக் கழகத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி

sa

சட்டவிரோத மீன்பிடி; 59 பேர் கடற்படையினரால் கைது

October 2, 2026

ப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி

MediaFile_20261001_204230_077

டயர்களுக்கு புதிய தரநிலைகள்!

October 2, 2026

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயணிகள் கார்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான டயர்களுக்கு புதிய இலங்கை தரநிலைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, நிதி,

ins

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம் 2 ட்ரில்லியனை கடந்தது

October 2, 2026

2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதியளவில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனது வருமானச் சேகரிப்பில் 2 ட்ரில்லியன்

fru

நச்சுப் பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

October 2, 2026

நச்சுப் பொருட்கள் அடங்கிய பழங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி

pazha-nedumaran-son-manikam-passed-away-tamil-news-2026-10-01-18-49-23 - Copy

பழ. நெடுமாறனின் மகன் மெல்பேர்னில் காலமானார்! – “பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் இறுதிச் சடங்கிற்குச் செல்ல முடியாத சோகம்!”

October 1, 2026

மெல்பேர்ன்: உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசிய இயக்கத் தலைவருமான பழ. நெடுமாறன் அவர்களின் மகன் மாணிக்கம் (வயது

6

“இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!” – உதயநிதியைக் கடுமையாகச் சாடி, தவெகவுக்கு ஆதரவாகத் துரை வைகோ அதிரடி!

October 1, 2026

தூத்துக்குடி: வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியான திமுக டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை

kajen

அடக்குமுறைகளுக்கு அஞ்சாது, எமது உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் ஒன்றாக அணிதிரள்வோம் – கஜேந்திரன் குற்றச்சாட்டு

October 1, 2026

​அரசினதும் பொலிஸாரினதும் அடக்குமுறைகளுக்கு அஞ்சாது, எமது உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் ஒன்றாக அணிதிரள்வோம் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்

HTeMCSka8AAALCZ

“தூய்மையான சக்தி எனச் சொல்லிக்கொண்டு ‘திருடும்’ சக்தியாக மாறிய தவெக!” – முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாகச் சாடிய கனிமொழி!

October 1, 2026

மதுராந்தகம்: தூய்மையான அரசியல் சக்தி என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தவெக, தற்போது மக்கள் பிரதிநிதிகளைத் திருடும் சக்தியாக மாறிவிட்டதாகத்

4

திலீபனின் சிலை அகற்றம்; நினைவேந்தலை தடுப்பது உயிரிகளின் மாண்புக்கு எதிரானது – சர்வமத பேரவை

October 1, 2026

ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலை தடுப்பது, குழப்புவது, எடுப்பார் கைப்பிள்ளையாக்க முனைவது உயிரிகளின் மாண்புக்கு எதிரானதாகும் என யாழ். மாவட்ட சர்வமத