அனோஜன் விவகாரம் தொடர்பில் சவுதி அரேபியா செல்லவுள்ள இலங்கை நாடாளுமன்ற குழுவில்இலங்கை தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனை சேர்க்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இது குறித்து அவர் மேலும்தெரிவித்துள்ளதாவது
அனோஜன் சிவராஜா தொடர்பில் நிலையியல் கட்டளையின் கீழ் நான் எழுப்பிய கேள்விகளை தான் ஏற்கனவே பதிலளித்துவிட்டதாக தெரிவித்து வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் ஏற்கனவே நிராகரித்துவிட்டார்.
ஆனால் அவர் பதிலளிக்க மறுக்கும் கேள்விகளே அரசாங்கத்தின் தாமதங்களையும் செயலற்ற தன்மைகளையும் அம்பலப்படுத்தக்கூடியவை.
மேல்முறையீட்டிற்காக ஓகஸ்ட் 12அன்றே ரூ18 மில்லியன் செலுத்தப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 15ம் திகதிக்கு பின்னரே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது ஏன்?மேல் முறையீடு நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும் சட்டத்தரணி குறித்தும் அனோஜனின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்படாதது ஏன்?
இதில் எந்தவிதமான அரசியல் நோக்கமும் இல்லை எங்களது முன்னுரிமை மிக தெளிவானது,சாத்தியமான அனைத்து வழிகளிலும் அனோஜனின் உயிரை காப்பாற்றவேண்டும்.
சுவுதிஅரேபியா செல்லவுள்ள அரசாங்கத்தின் நாடாளுமன்ற குழு உட்பட அனைத்து சாத்தியமான முயற்சிகளுக்கும் எங்களது ஆதரவை வழங்குவோம்.
இந்த குழுவில் தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனையும் சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்
(ரி)