சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி இன்று (20) திருகோணமலை கடற்கரை பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலையில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் இளைஞர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறும் இரு நிமிட மௌன அஞ்சலியுன் சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இலங்கை அரசாங்கம் குறித்த விடயத்தில் தலையிட்டு, சவூதி அரேபிய அரசாங்கத்துடன் உரிய ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.