எல் நினோ காரணமாக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்

தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, சூரிய ஒளிக்கு நேரடியாக ஆளாவதால் பல நோய்கள் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் இனோகா சுரவீர தெரிவித்துள்ளார்.

இன்று (19) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற எல் நினோ நிலைமை குறித்தான விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த அதிக வெப்பத்துடன்கூடிய வானிலை காரணமாக தோலில் ஏற்படும தடிப்புகள், தசைப்பிடிப்பு மற்றும் அதிக வெப்பத்திற்கு ஆளாவதால் உயிரிழப்புகள்கூட ஏற்படக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலைமைகளுக்கு ஆளாகும் அதிக அபாயத்தைக் கொண்ட குழுக்களாக சிறுவர்கள், முதியவர்கள், தொற்றா நோய்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களைக் குறிப்பிடலாம் என வைத்தியர் இனோகா சுரவீர கூறினார்.

அத்துடன், வெளிப்புறங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த நிலைமையினால் கடுமையான அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, இந்த சுகாதாரப் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக நண்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் அதிக வெயிலில் செல்வதைத் தவிர்ப்பது அவசியமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

“தோல் வறட்சியடையக்கூடும், இதற்கு முடிந்தவரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதன் மூலம் அந்நிலையைக் குறைத்துக் கொள்ள முடியும். தரமான சருமப் பூச்சுகளைப் பயன்படுத்தலாம். கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரைக் குடியுங்கள். ஆற வைத்த நீர் என்பது குளிரூட்டப்பட்ட நீர் அல்ல.”

மேலும், நீர் அருந்துதல், மென்மையான நிறமுடைய ஆடைகளை அணிதல், தலைப் பகுதியை மூடுதல் மற்றும் முக்கியமாக நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மருந்துகளை சரியான அளவில் உட்கொள்வது மிகவும் முக்கியமான காரணியாகும் என வைத்தியர் தெரிவித்தார்.

இந்த நிலைமையை மேலாண்மை செய்து செயற்படுவதற்காக அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து சுகாதார அமைச்சு செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த எல் நினோ நிலவரத்தின் போது பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்காக ஏற்கனவே கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பாடசாலை முடிவடையும் நேரத்தில் மாணவர்கள் தொப்பி அல்லது குடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், தேவையற்ற முறையில் திறந்தவெளியில் விளையாடுவதைக் குறைத்து, முடிந்தவரை நிழலான இடங்களில் நடமாடுவது முக்கியம் என்றும் கூறினார்.

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்

kal

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

October 9, 2026

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்

images - 2026-10-09T112650.899

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை!” – வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

October 9, 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று

tvkmadhuranthagam-down-28521791085533

“மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் முடிவுகள் – 11 மணி நிலவரம்!” – தவெக வேட்பாளர்கள் முன்னிலை!

October 9, 2026

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக