“10,000 பேருக்கு இலவச சிகிச்சை!” – சுதந்திர தின விழாவில் ஏ.பி.ஜே அப்துல் கலாம் விருது பெற்ற டாக்டர் வி.மோகன்! முதல்வர் விஜய் வழங்கி கௌரவிப்பு!

சென்னை
இந்தியத் திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சர்க்கரை நோயியல் துறை சிறப்பு நிபுணர் டாக்டர் வி.மோகனுக்கு ‘டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்’ விருதை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வழங்கி கௌரவித்தார்.
சுதந்திர தின விருதுகள் – முழு விவரம்:
கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக் கொடியேற்றி உரையாற்றிய முதலமைச்சர் விஜய், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார்.
  • தகைசால் தமிழர் விருது: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எம். கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது.
  • கல்பனா சாவ்லா விருது: துணிவு மற்றும் சாகசச் செயலுக்காக கோயம்புத்தூரைச் சேர்ந்த நெளஷீன் பானு சந்த் என்பவருக்கு வழங்கப்பட்டது.
  • டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் விருது: சர்க்கரை நோயியல் சிறப்பு நிபுணர் டாக்டர் வி.மோகனுக்கு வழங்கப்பட்டது. அவர் விழாவிற்கு வர இயலாத காரணத்தால், அவரது மகள் சஞ்சனா முதலமைச்சரிடம் இருந்து இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
யார் இந்த டாக்டர் வி.மோகன்?:
டாக்டர் வி.மோகன், சர்வதேச அளவில் புகழ்பெற்ற சர்க்கரை நோயியல் நிபுணரும், சர்க்கரை நோய் மருத்துவத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றி வரும் முன்னோடியும் ஆவார். மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவரான இவர், 10,000-க்கும் மேற்பட்ட ஏழை மற்றும் ஆதரவற்ற சர்க்கரை நோயாளிகளுக்கு (600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட) வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவச் சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்கி வருகிறார்.
கிராமப்புற மருத்துவப் புரட்சி:
  • சூனாம்பேட்டில் இந்தியாவின் முதல் கிராமப்புற சர்க்கரை நோய் மையத்தை நிறுவி, 42 கிராமங்களை உள்ளடக்கிய 65,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவசப் பரிசோதனைகளைச் செய்துள்ளார்.
  • 8 மாநிலங்களில் சுமார் 4,000 இலவச மருத்துவ முகாம்களை நடத்தி, 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உதவியுள்ளார்.
  • சென்னையில் மட்டும் 14,000-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாகச் சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கியுள்ளார்.
ஆராய்ச்சி சாதனைகளும் கௌரவங்களும்:
சர்க்கரை நோயைத் தடுப்பது மற்றும் மேலாண்மை செய்வதில் ‘MODY Calculator’, ‘EpiNu’, ‘Food Atlas of India’ உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளார். 1,890-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள டாக்டர் வி.மோகன், மருத்துவத் துறையின் உயரிய விருதான பி.சி.ராய் விருது, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நூற்றாண்டு விருது உள்ளிட்ட எண்ணற்ற சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். இவரின் ஈடு இணையற்ற மருத்துவச் சேவையைப் பாராட்டி, கடந்த 2012-ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்குப் ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
#DrVMohan #AbdulKalamAward #ChiefMinisterVijay #ThalapathyVijay #JosephVijay #IndependenceDay2026 #FortStGeorge #TVKGovernment #DiabetesCare #PadmaShri #TamilNaduNews #Chennai #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates
Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்