“100 நாட்களில் த.வெ.க ஆட்சியின் செயல்பாடு ஜீரோ!” – முதலமைச்சர் விஜய் அரசை விளாசிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!

தூத்துக்குடி
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராகிக் கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்தார்.
“திமுகவினரைக் குறிவைக்க முடியாது!”:
செய்தியாளர்களிடம் பேசிய மார்க்கண்டேயன், “திமுகவினரை யாராலும் குறிவைக்க முடியாது. எதற்காக எங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்? இதில் வழக்கு பதிவு செய்ய என்ன இருக்கிறது?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
“கோபத்தில் அடிப்பதுதான் அமைதியின் மொழியா?”:
“நிதி அமைச்சருக்குச் சட்டமன்றத்தில் அவ்வளவு கோபம் தேவையில்லை. அமைதியின் மொழி தனக்குத் தெரியும் என்று அவர் கூறுகிறார். கோபத்தில் அடிப்பதுதான் அமைதியின் மொழியா? அவர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் என்னுடைய செயல்பாடு எப்போதுமே ஒரே மாதிரிதான் உள்ளது,” என்றார்.
“தவெக ஆட்சியின் செயல்பாடு பூஜ்யம்!”:
“தவெக ஆட்சியின் 100 நாள் செயல்பாடு முற்றிலும் பூஜ்யமாகவே உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒன்பதரை லட்சம் பேருக்கு மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. ரூ.2,000 கட்டணம் வந்தவர்களுக்கு தற்போது ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை கட்டணம் வந்துள்ளது. இதை அமைச்சரே ஒப்புக்கொள்கிறார், ஆனால் தனிப்பட்ட முறையில் புகார்கள் வரவில்லை என மழுப்புகிறார்,” என்று குற்றம் சாட்டினார்.
“நடிகர்கள் வருகையால் திமுகவுக்குப் பாதிப்பில்லை”:
“எல்லா சினிமா நடிகர்களும் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களை வர வேண்டாம் எனச் சொல்ல முடியாது. ஆனால், நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. திமுக மாபெரும் பேரியக்கம். 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் எனத் தொடர்ந்து நான்கு தேர்தல்களிலும் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் எங்கள் கூட்டணி 74 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது,” என்று பெருமிதம் தெரிவித்தார்.
“தவெக தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது”:
“தேர்தலில் ஒரு அரசியல் கட்சியால் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருக்க முடியாது. இப்போது நாங்கள் எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறோம்; அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம். நாங்கள் எதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்? தவெக தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் அங்கே போய் சேர்ந்துள்ளனர் என்பதைப் பாருங்கள்,” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
#DMK #Markandayan #TVKGovernment #ChiefMinisterVijay #Thoothukudi #TNPolitics #TamilNaduNews #TNEB #TNAssembly #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates
ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்