கனடாவின் பிக்கறிங் பகுதியில் கோர்ன்வோல் சிவாலயத்தின் நிறுவனரும் தலைவருமான சிவரூபன் சண்முகலிங்கம் அவர்களின் இல்லத்தில் கடந்த 10ஆம் திகதி கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோர்ன்வோல் சிவாலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி தேர்த்திருவிழாவில் தலைவர் சிவரூபன் சண்முகலிங்கம் கலந்து கொண்டிருந்த வேளையில் அவரின் வீட்டில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பணம் மற்றும் தங்கநகைகள் போன்ற பொறுமதியான பொருட்கள் வைக்கும் பாதுகாப்புப் பெட்டி உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. திருட்டுச் சம்பவம் இடம்பெற்றதை அவரின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் அயலவரொருவர் முதலில் அவதானித்து சிவரூபன் சண்முகலிங்கத்துக்குத் தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து தனது வீட்டிலிருந்த கண்காணிப்புக் கமராக் காட்சிகளை சிவரூபன் சண்முகலிங்கம் வெளியிட்டிருக்கின்றார்.
அத்துடன் மேற்படி கொள்ளைச் சம்பவம் சிவரூபன் சண்முகலிங்கம் வீட்டில் இல்லை என்பதை உறுதிப்படுத்தித் திட்டமிட்டு இடம்பெற்றதா இல்லையா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பாக டர்ஹம் காவல்துறைக்கு அறிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ளப்படவில்லையெனவும் தெரிய வருகின்றது.
கொள்ளையர்கள் யார்? இது திட்டமிட்ட கொள்ளைச் சம்பவமா? கொள்ளையர்களை அடையாளம் காண்பது எப்படி? என்பவை குறித்து காவல்துறையின் விசாரணைகளுக்குப் பின்னரே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.