சென்னை
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைத் தவிர்த்துப் பிற முக்கியப் பிரமுகர்களின் (VIP / VVIP) மாவட்ட வருகையின் போது மேற்கொள்ள வேண்டிய செலவினங்களுக்காக ஓராண்டுக்கு ரூ.6.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாவட்டங்கள் வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்:
மாவட்டங்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது:
-
‘ஏ’ பிரிவு மாவட்டங்கள்: கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு.
-
‘பி’ பிரிவு மாவட்டங்கள்: நெல்லை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் ஒதுக்கீடு.
-
‘சி’ பிரிவு மாவட்டங்கள்: ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ரூ.15 லட்சம் ஒதுக்கீடு.
முக்கிய வி.ஐ.பி மற்றும் வி.வி.ஐ.பி-க்களின் வருகையின் போது தங்குமிடம், வாகனம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விதமான செலவுகளையும் தடையின்றி மேற்கொள்வதற்காக இந்தத் தொகை பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#VIPFund #VVIP #TNGovernment #GOIssued #FundAllocation #Coimbatore #Madurai #Nellai #Salem #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates