கொழும்பு மாளிகாவத்தையில் பாதாள உலகத்தை சேர்ந்த கஞ்சிப்பானி இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பாதாளஉலக குழுக்களிடையே மோதல்கள் வெடிக்கலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இரண்டு பாதளஉலக குழுக்களிடையேயான மோதல்கள் காரணமாகவே நேற்றைய கொலை இடம்பெற்றது என தெரிவித்துள்ள பொலிஸார் சந்தேகநபர்களை கைதுசெய்வதற்காக இரண்டு பொலிஸ்குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்த வருடம் 27 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.