“தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாடக்கோரும் தீர்மானம் வரவேற்புக்குரியது!” – முதலமைச்சர் விஜய்க்கு சீமான் வாழ்த்து!

சென்னை
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வலியுறுத்தும் தீர்மானத்தைத் தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றிய ஆளும் தவெக அரசுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.
மொழியே இனத்தின் அடையாளம்:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள தீர்மானத்தை முழுமையாக வரவேற்கிறேன். மொழியை ஏற்றிருக்கிற நிலம்தான் தேசமாகவும், மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ள மக்கள் கூட்டம்தான் தேசிய இனமாகவும் வரையறுக்கப்படுகிறது. ஒரு இனத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வழிபாடு, வாழ்வியல், அரசியல் எல்லாம் மொழியிலிருந்துதான் பிறக்கிறது. அதனால்தான், மொழியைத் தாயென்று போற்றுகிறோம். மொழியே ஒரு இனத்தின் முகம், முகவரி, அடையாளம் என எல்லாவுமாகத் திகழ்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
தன்மான உணர்வைப் போற்றும் தீர்மானம்:
“தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டில் தமிழை முதன்மைப்படுத்தப்பட வேண்டியது தமிழர் நிலத்தை ஆளுகை செய்யும் ஆட்சியாளர்களின் தார்மீகக் கடமையாகும். அந்த வகையில், தமிழர் தாய்நிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்படுவதை உறுதிசெய்ய முன்வர வேண்டும். அதுவே தமிழ்த்தேசிய இனத்தின் இறையாண்மையையும், தமிழர்களின் தன்மான உணர்வையும் மதித்துப் போற்றுவதாக அமையும். அதுபோல, ஒவ்வொரு தேசிய இனத்தின் தாயகத்திலும் அந்தந்த இனத்தின் தாய்மொழியைப் போற்றும் பாடலே முதன்மையாக இடம்பெற வேண்டும்,” என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக அரசின் திணிப்புக்குக் கண்டனம்:
தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்த அவர், “பல்வேறு மொழிவழித் தேசிய இனங்கள் ஒரே நாட்டுக்குள் ஒன்றிணைந்து வாழ்வதைக் கண்டு உலக நாடுகள் வியக்கின்றன. அத்தகைய தேசிய இனங்களின் தன்னுரிமையையும், தனித்துவ அடையாளத்தையும் பாதுகாப்பதே இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்கு ஏற்றதாகும். மாறாக, தேசிய இனங்களின் உரிமைகளை மறுத்து ஒற்றை மொழியையும், ஆதிக்கத்தையும் திணிக்க முற்பட்டால், அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உணர வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என எல்லாவற்றையும் ஒற்றைமயப்படுத்தும் பாஜக அரசு, நாட்டுப்பண்ணை மட்டும் இரண்டாகத் திணிப்பது கேலிக்கூத்தாகும். மதச்சார்பு கொண்ட ‘வந்தே மாதரம்’ பாடலை வலியத் திணிப்பதும், தாய்மொழியைப் போற்றும் பாடலைப் பின்னுக்குத் தள்ளுவதும் கடும் கண்டனத்திற்குரியது,” எனச் சாடியுள்ளார்.
தவெக அரசுக்கு நன்றி:
“தமிழ்த்தாய் வாழ்த்தே தமிழ்நாட்டில் முதன்மைப் பாடலாகப் பாடப்பட வேண்டும் எனும் தமிழர்களின் ஒருமித்தக் கருத்தோட்டத்தின் விளைவாக, இந்தத் தீர்மானத்தைத் தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றிய ஆளும் தவெக அரசுக்கும், தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கும், தீர்மானத்தை ஆதரித்துத் துணைநின்ற அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என சீமான் நெகிழ்ச்சியுடன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
#Seeman #NTK #NaamTamilarKatchi #TamilThaiVaazhthu #ChiefMinisterVijay #ThalapathyVijay #TVKGovernment #TamilNaduNews #TNPolitics #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates
Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்