சட்டப்பேரவையில் நீட் விலக்கு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கைக்குத் தமிழக அரசு வலியுறுத்தல்!

சென்னை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான மூன்றாவது நாள் விவாதம் இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், நீட் தேர்வு முறையை முற்றிலுமாக அகற்ற வலியுறுத்திச் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
கிராமப்புற மாணவர்களுக்குப் பெரும் பாதிப்பு:
தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அமைச்சர் அருண் ராஜ், “தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள், கிராமப்புற மற்றும் சமூக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு முறை பெரிதும் பாதிக்கிறது. இந்த நீட் தேர்வானது, வரம்பின்றி அதிகளவு கட்டணம் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்கள் பெருகுவதற்கு மட்டுமே வழிவகுக்கிறது. மாணவர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் பள்ளிப் பாடத்திட்டத்தைப் பயில்வதில் இருந்து திசை திருப்பி, நீட் பயிற்சியில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தக் கட்டாயப்படுத்துகிறது. 12 ஆண்டுகாலப் பள்ளிக்கல்வியைப் புறந்தள்ளிவிட்டு, ஒரே ஒரு நாள் நடக்கும் நுழைவுத் தேர்வே மாணவர்களின் உயர்கல்வியைத் தீர்மானிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது,” என்று வேதனை தெரிவித்தார்.
முறைகேடுகளும் நம்பிக்கையிழப்பும்:
மேலும் அவர் கூறுகையில், “கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்ட முன்வடிவை (எண்: 43/2021) தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றியிருந்தும், குடியரசுத் தலைவரால் அச்சட்ட முன்வடிவுக்கு ஏற்பிசைவு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில்தான், தொடர் வினாத்தாள் கசிவு மற்றும் பெரும் முறைகேடுகளால் 2026-ஆம் ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பெரும் துயரம் அடைந்தனர்; உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இத்தேர்வு முறை நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டது. எனவே, இத்தேர்வு முறை உடனடியாக அகற்றப்பட வேண்டும்,” எனத் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
மத்திய அரசுக்குத் தமிழக அரசு வலியுறுத்தல்:
“நீட் தேர்வுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு, நீட் தேர்வு முறையை ரத்து செய்யும் வகையில் 2019-ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2020-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையச் சட்டம், 2020-ஆம் ஆண்டு ஹோமியோபதிக்கான தேசிய ஆணையச் சட்டம் மற்றும் இது தொடர்புடைய பிற மையச் சட்டங்களில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இதன் மூலம், மாணவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை தடையின்றி மேற்கொள்ள இயலும்,” என்று அவர் முன்மொழிந்தார்.
பாஜக வெளிநடப்பு – ஒருமனதாக நிறைவேற்றம்:
இந்த அரசினர் தனித் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். எனினும், இந்தத் தீர்மானத்திற்கு ஆளுங்கட்சியான தவெக, மற்றும் திமுக, அதிமுக, பாமக, மஜக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்களது முழுமையான ஆதரவைத் தெரிவித்தன. இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய இந்த அரசினர் தனித் தீர்மானம் பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
#NEETExemption #TNAssembly #MinisterArunRaj #ChiefMinisterVijay #TVKGovernment #BanNEET #TamilNaduNews #TNPolitics #Chennai #MedicalAdmission #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates
va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ