சிறைச்சாலைகளில் வேகமாகப் பரவும் வன்முறையின் எதிரொலியால் யாழ்ப்பாணம் சிறைச்சாலைச் சூழலிலும் பொலிஸார் இராணுவத்தினர் இன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையைச் சூழ பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு சிறைச்சாலைக்குள் இருந்த தேவையற்ற இரும்புப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டுவதையும் காணமுடிந்தது.
தெற்கில் இடம்பெற்ற சிறைச்சாலைக் கலவரங்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இரும்பு பொருட்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.