IGP மற்றும் தலைமை நீதிபதி இல்லங்களை வீடியோ எடுத்தவர் கைது

பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களைச் சுற்றியுள்ள வீதிகளைத் தனது கைப்பேசியில் வீடியோ பதிவு செய்த குற்றச்சாட்டின் பேரில் 40 வயதுடைய நபர் ஒருவர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை (06) இரவில் இடம்பெற்ற இக்கைது நடவடிக்கையின் போது, சந்தேகநபரின் கைப்பேசியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை (STF) அதிகாரி ஒருவர், அங்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு வாகனம் ஒன்றின் சாரதி தனது கைப்பேசியில் வீதிப் பகுதியைப் படம்பிடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்துள்ளார்.

இதனையடுத்து அந்த அதிகாரி அப்பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகநிலருக்குத் தகவல் அளித்து, கொழும்பு அவசர பதிலளிப்புப் பிரிவையும் உஷார்படுத்தியுள்ளார். உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் நடமாடும் ரோந்துப் பிரிவினர், ஆரம்ப கட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபரைத் தடுத்து வைத்து கைது செய்தனர்.

சந்தேகநபரின் கைப்பேசியைச் பரிசோதித்த போது, பொலிஸ் மா அதிபர் மற்றும் தலைமை நீதிபதி ஆகிய இருவரின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகள் அடங்கிய வீடியோ காட்சிகள் அதில் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையின் போது, தான் பொழுதுபோக்கிற்காகவே இந்த வீடியோக்களைப் பதிவு செய்ததாகச் சந்தேகநபர் தெரிவித்த போதிலும், அவரது வசிப்பிடம் மற்றும் ஏனைய விபரங்கள் தொடர்பில் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்