மொன்றியல் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட போது அணிந்திருந்த ஆடைகளில்   இரத்தக் கறை

கடந்த கோடைகாலத்தில் நியூயோர்க்கின் கிராமப்புறப் பகுதியில் ஒன்பது வயது மொன்றியல் சிறுமி உயிரிழந்த போது அணிந்திருந்த ஜாக்கெட்டில் பொலிஸார் இரத்தக் கறைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் தனது மகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கின் போது, நியூயோர்க் மாநில பொலிஸின் தடயவியல் விஞ்ஞானி ஒருவர் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சாட்சியத்தில் இந்த கண்டுபிடிப்பு குறித்துத் தெரிவித்தார்.

மொன்றியலில் வசித்து வந்த மெலினா பிராட்டோலின் (Melina Frattolin) என்பவரின் மரணம் தொடர்பாக, லூசியானோ பிராட்டோலின் (Luciano Frattolin) இரண்டாம் நிலை கொலைக் குற்றம் மற்றும் மனித உடலை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

46 வயதான இந்நபர் இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள நிலையில், ஜூலை 2025 இல் கைது செய்யப்பட்டது முதல் பிணையின்றி காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி மெலினாவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட போது அவர் அணிந்திருந்த ஆடைகளில் இரத்தக் கறைகள் உள்ளதா என மாநில பொலிஸ் படையின் தடயவியல் விஞ்ஞானியான கிம்பர்லி ஸ்டோடார்ட் (Kimberly Stoddard) சோதனையிட்டார். பல சோதனைகளின் முடிவுகள் தெளிவற்றதாக இருந்ததாக சாட்சியமளித்த அவர், ஆடைகளில் படிந்திருந்த சேறே இதற்குக் காரணம் என்று கூறினார்.

நீதிமன்ற நடுவர் மன்றத்தில் (Jury) காண்பிக்கப்பட்ட போது, சிறுமியின் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிற ஆடைகள் ஒரு அடுக்குச் சேற்றினால் மூடப்பட்டிருந்தன. தந்தையுடனான பயணத்தின் முடிவில், நியூயோர்க் கிராமப்புறத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில் மெலினா மூழ்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

சோதிக்கப்பட்ட பொருட்களில் ஒன்றான மெலினாவின் ஜாக்கெட்டின் பல இடங்களில் இரத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி ஜாக்கெட்டின் கைப் பகுதி மற்றும் தொப்பிப் பகுதியில் (hood) இரத்தக் கறைகளை ஸ்டோடார்ட் கண்டுபிடித்தார்.

“அந்தப் பகுதியில் சிவந்த நிறக் கறைகள் தெளிவாகத் தெரிந்தன,” என்று அவர் நடுவர் மன்றத்தில் தெரிவித்தார்.

பிராட்டோலினின் காரில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆவணத்திலும் அவரது சோதனைகள் மூலம் இரத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த ஆவணம் பிராட்டோலினுக்கும் சிறுமியின் தாயாருக்கும் இடையே நடந்த உரையாடலைக் கொண்ட மூன்று பக்க ஆவணமாகும். இதைப் சாட்சி ஒருவர் கடந்த வாரம் நடுவர் மன்றத்தில் வாசித்துக் காட்டியிருந்தார்.

அதில், பிராட்டோலின் சிறுமியின் தாயாரைக் இலக்கு வைத்து குற்றச்சாட்டுகளையும் பிற அவதூறான கருத்துக்களையும் முன்வைத்துள்ளார். இந்த உரையாடல் கற்பனையானதா அல்லது உண்மையான உரையாடலைக் குறிக்கிறதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

“முடிவு/ஒப்புதல் வாக்குமூலம்” (Closure/Confession) என்ற தலைப்பிற்கு அருகில் காணப்பட்ட ஆவணத்திலிருந்த சிவப்பு நிறக் கறையை ஸ்டோடார்ட் சோதித்தார்.

“தெளிவாகத் தெரிந்த கறைப் பகுதி அந்த இரண்டு வார்த்தைகளுக்கும் இடையில் உள்ள கோட்டில் (slash) இருந்தது,” என்று ஸ்டோடார்ட் கூறினார்.

சோதனைக்குப் பிறகு, ஸ்டோடார்ட் அந்தப் பொருட்களை டி.என்.ஏ (DNA) பகுப்பாய்விற்காக அனுப்பினார். ஜாக்கெட்டிலும் ஆவணத்திலும் இருந்த இரத்தம் யாருடையது என்பதை அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிடவில்லை.

வெள்ளை நிற அடிடாஸ் காலணிகள், பிராட்டோலின் ஓட்டிச் சென்ற காரில் காணப்பட்ட ஆடைகள் மற்றும் அப்பகுதியில் இருந்த வெள்ளை நிறக் குப்பை பையில் காணப்பட்ட ஆடைகள் போன்ற குற்றச் சம்பவ இடத்தைச் சுற்றி பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்ட பிற பொருட்களையும் அவர் சோதித்தார். தெளிவான அழுக்குகளுடன் காணப்பட்ட இந்த பொருட்களில் இரத்தக் கறைகள் இல்லை அல்லது பரிசோதனை முடிவுகள் தெளிவற்றதாகவே வந்தன.

வெள்ளை நிற வேனில் வந்த இருவர் தனது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாக பிராட்டோலின் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அவர் கடத்தல் குற்றச்சாட்டுகளைப் பொய்யாகப் புனைந்துள்ளதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இவ்வழக்கு கனடா-அமெரிக்க எல்லையின் இருபுறமும் பெரும் உணர்ச்சிப்பூர்வமான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி உயிரிழந்த நியூயோர்க் பிராந்தியத்தைச் சுற்றியுள்ள மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதுடன் நினவு அஞ்சலிகளையும் செலுத்தியுள்ளனர்.

இவ்வழக்கின் விசாரணை புதன்கிழமை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்