புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீட்டிப்பு அடங்கிய புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பான 360 நடப்பு விவகாரங்கள் மற்றும் அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதனைக் குறிப்பிட்டார்.

இதற்கமைய, குறித்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 2 வருடங்களால் உயர்த்துதல், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களின் நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் தலைமை நீதிபதியின் பதவிக்காலத்தை 6 ஆண்டுகளுக்குக் மட்டுப்படுத்துதல் ஆகிய முன்மொழிவுகள் இச்சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், அது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார:

“இன்று, இதைத்தான் நாம் முன்னிலைப்படுத்த வேண்டும். அரசியலமைப்புத் திருத்தம் மட்டுமல்ல. ஏனெனில் இந்தத் திருத்தத்தின் மூலம் நாங்கள் பல விடயங்களைச் செய்கிறோம். ஒன்று, அனைத்து நீதிபதிகளின் வயது வரம்பை உயர்த்துவது. நீதிமன்ற உறுப்பினர்களின் வயதை உயர்த்தும் போதே அரசியலமைப்புத் திருத்தம் வருகிறது. மற்றொன்றிற்கு நாங்கள் நீதிமன்ற அமைப்புச் சட்டத்தையே திருத்தியுள்ளோம்.

இதுதவிர, நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துகிறோம். மேல் நீதிமன்றத்திலும் எண்ணிக்கையை உயர்த்த அந்தத் திருத்தத்திலேயே சேர்த்துள்ளோம். நாங்கள் பேசாத மற்றொரு விடயம் என்னவென்றால், தலைமை நீதிபதியாகும் போது அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் என்ற காலவரையறைக்கு உட்படுத்த வேண்டும் என்று இங்கு யோசித்தோம். உண்மையில் இந்த விடயம், 2016 ஆம் ஆண்டு சட்டத்தரணிகள் சங்கம் செய்த முன்மொழிவுகளின் ஒரு பகுதியாகவே நாங்கள் எடுத்துக்கொண்டோம். அது ஆறு ஆண்டுகளுக்குக் மட்டுப்படுத்தப்படும்.

அதாவது, ஒன்று 67 வயது, அல்லது 6 ஆண்டுகள் நிறைவு பெறுவது என்ற திருத்தங்களை இன்று கொண்டு வந்தோம். இன்று அதை அமைச்சரவையில் சமர்ப்பித்து, வர்த்தமானிப் பத்திரிகையில் மூன்று மொழிகளிலும் சமர்ப்பித்து, வர்த்தமானியில் வெளியிடுவதற்கே அனுமதி கோருகிறோம். வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பிறகு, சுமார் ஒரு வாரம் அது வர்த்தமானியில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதன் பிறகு சுமார் இரண்டு வாரங்கள் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருக்க வேண்டும். சுமார் மூன்று வார காலம் உள்ளது.

அந்தக் காலப்பகுதியில் இதற்கு சவால் விடுப்பதாக இருந்தால், இதில் ஏதேனும் தவறு, பிரச்சினை இருந்தால், பொது விவாதத்தை ஏற்படுத்த முடியும். எனவே பெரும்பாலான நேரங்களில் இதற்கெதிராக வழக்குத் தொடரப்படும் என நினைக்கிறேன். அப்படி நடந்தால், அந்த மூன்று மாதங்கள் மேலும் ஒரு மாதம் வரை நீடிக்கலாம், ஒன்றரை மாதங்கள் கூடச் செல்லலாம். ஏனெனில் நீதிமன்றத்தால் ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.” என்றார்.

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது

velmurugan-CPI

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் த.வெ.க. அரசு!” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

August 24, 2026

ன்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து விரிவாக்கம் மற்றும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட

hindutamil-prod_2026-08-08_ozeaw6pt_mutharasan

“கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக த.வெ.க. அரசு செயல்படுகிறதா?” – முதலமைச்சருக்கு முத்தரசன் கேள்வி!

August 24, 2026

கும்பகோணம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் முத்தரசன்,