பெர்ச்மவுண்ட் மற்றும் செயிண்ட் கிளேர் (Birchmount and St Clair) பகுதிக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டதாகவும், ஆனால் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை அதிகாலை ஸ்கார்பரோவில் (Scarborough) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து டொரண்டோ காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாலை 2:34 மணியளவில் பெர்ச்மவுண்ட் வீதி மற்றும் செயிண்ட் கிளேர் அவென்யூ ஈஸ்ட் பகுதிக்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டதுடன், அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது. காயங்கள் எதுவும் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை.
சந்தேகநபர்கள் தொடர்பான விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என டொரண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.