காவிரி விவகாரம்: முதல்-அமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து – அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி பதிலடி!

ஈரோடு:

காவிரி நதிநீர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வருகிறது; அதனால் தான் அவர் வாய் திறப்பதில்லை எனத் தமிழக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காவிரித் தொடர்பாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் உறக்கம் கலைத்துத் திருவாய் மலர்வது எப்போது எனத் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்துத் தான் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் இல்லை. அண்டை மாநிலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது என்பதை உதாரணமாகக் காட்டி எங்களிடத்தில் கேள்வி கேட்பதைக் காட்டிலும், எல்லோரும் ஒருங்கிணைந்து டெல்டா விவசாயிகளை வாழ வைக்க வேண்டும் என்பதே அனைவரின் கனவாக உள்ளது” என்று கூறினார்.

மேலும், “அந்தக் கனவு நிறைவேறும் காலம் வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டது. நல்லதொரு முதலமைச்சர் நமக்குக் கிடைத்துள்ளார். அந்தக் காலம் பொற்காலமாக அமையும். முதலமைச்சர் விஜய் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வருகிறது; அதனால் தான் அவர் வாய் திறப்பதில்லை” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், வேளாண்மைக்கெனத் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், அதில் விவசாயிகளின் நலன்களுக்கான அனைத்துச் சிறப்புத் திட்டங்களும் இடம்பெறும் என்றும் உறுதிபடக் கூறினார்.

#Sengottaiyan #CMVijay #CauveryIssue #TVKGovt #MinisterSengottaiyan #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #Ragupathy #PoliticalUpdate #TamilNewsLive

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ