கடந்த காலங்களைப் போல் இல்லாமல் நீதிமன்றங்களின் சுயாதீனமான செயற்பாடுகள் வரவேற்புக்குரியவை – சாணக்கியன்

கடந்த காலங்களைப் போல் இல்லாமல் தற்போது பதவி நிலைகளைப் பாராமல் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்பட்டு, பல தீர்ப்புகளை வழங்கி வருவது வரவேற்புக்குரியது என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சராக இருந்து, முப்படைகளுக்கும் இராணுவத்தினருக்கும் பொறுப்பாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று எதுவுமே அறியாதவர் போல அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டும், பாடல்களைப் பாடிக்கொண்டும் கோமாளி போன்று சுற்றிக்கொண்டும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புகள் குறித்து நாங்கள் நேரடியாக விமர்சனங்களைச் சொல்ல முடியாது. இருப்பினும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் இன்னும் பலர் குற்றவாளிகளாகவோ அல்லது பொறுப்புக்கூற வேண்டியவர்களாகவோ இருக்கிறார்கள்.

அன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்து, முப்படைகளுக்கும் இராணுவத்தினருக்கும் பொறுப்பாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று எதுவுமே அறியாதவர் போல அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும், பாடல்களைப் பாடிக்கொண்டும் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

அதேபோன்று, அன்றைய காலகட்டத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தத் தாக்குதல் சம்பவத்தின் மூலம் பயனடைந்ததாக பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் கோட்டாபய ராஜபக்ஷ போன்றோர் சுதந்திரமாக இருக்கும் நிலையில், தற்போது பிள்ளையான் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) போன்றோர் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் வெளிவந்த பின்னரே, ஈஸ்டர் தாக்குதல் குறித்த முழுமையான பின்னணியைப் புரிந்துகொள்ள முடியும். எனினும், கடந்த காலங்களைப் போலன்றி, தற்போது பதவி நிலைகளைப் பாராமல் நீதிமன்றங்கள் சுயாதீனமாகச் செயற்பட்டுப் பல தீர்ப்புகளை வழங்கி வருவது வரவேற்புக்குரியது. நீதிமன்றங்கள் தொடர்ந்து சுயாதீனமாகத் தீர்ப்புகளை வழங்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மட்டக்களப்பு மாவட்டம் சம்பந்தப்பட்ட ஒரு சில விடயங்களை முன்வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திலே அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த அபிவிருத்திக் குழு கூட்டத்திலே மிகத் தெளிவாக வெளியே வந்த ஒரு விடயம் தான் என்னவென்று சொன்னால், இன்று இந்த மாவட்டத்திலே நிர்வாகத்தை நடத்துவது யார் என்பது தெரியாத ஒரு நிலை வந்திருக்கின்றது.

தென்னிலங்கைச் சேர்ந்த, மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் இந்த மாவட்டத்திற்கு ஒரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை வருகை தந்து போவார். நேற்றைய தினம் அடுத்த கூட்டம் ஒன்பதாம் மாதம் ஏதோ ஒரு திகதியில் குறித்து அவர் சென்றுவிட்டார். இனி அவர் இரண்டு மாதங்களுக்கு வரும் வரைக்கும் இந்த மாவட்டத்திலே இருக்கிற முக்கிய பிரச்சினைகள், அதிகாரிகளை வழிநடத்துவது, அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் கொடுப்பது, ஆலோசனை வழங்குவது போன்ற விடயங்கள் யார் செய்வது என்பது தெரியாத ஒரு நிலை இருக்கின்றது.

நண்பர் கந்தசாமி பிரபு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் சில பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தால் அவதாவது சில விடயங்களைச் செய்திருக்கலாம். ஆனால் இன்று சூழலைப் பார்க்கும்போது அவருக்கே தெரியாமல் சில விடயங்கள் நடக்கிறது. ஒரு உதாரணம் ஒன்று மாத்திரம் சொல்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் என்ற பெயரிலே பல அமைச்சர்கள் கடந்த ஒரு ஆண்டுக்குள்ளே வந்திருந்தார்கள். அதிலே போக்குவரத்து அமைச்சர் வந்திருந்தார், பொலிஸ் பாதுகாப்பு அமைச்சர் வருகை தந்திருந்தார், வன விலங்குகளுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் வந்திருந்தார்கள், மீன்பிடித்துறை அமைச்சர் வந்திருந்தார்.

இதிலே குறிப்பாக மீன்பிடித்துறை அமைச்சர் வந்தபொழுது மட்டக்களப்பில் கழுவங்கேணிப் பிரதேசத்திலே, அந்த மீன்பிடி அமைச்சுக்குச் சொந்தமான நிலையத்திலே ஒரு புதிய ஐஸ் ஃபேக்டரி அமைப்பதற்கு 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் பார்க்கும்போது, தேசிய மக்கள் சக்தியினுடைய ஏதோ ஒரு அமைப்பாளர் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஒருவர், ‘பிரஜா சக்தி’ என்ற பெயரிலே அந்த கிராமத்தில் இருக்கிற ஒரு சிலரைச் சந்தித்து அந்த 25 மில்லியன் ரூபாய் திட்டத்தை மாற்றியிருக்கின்றார்.

இது சம்பந்தமாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சுனில் ஹந்துன்னெத்திக்குத் தெரியாது, பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபுவுக்குத் தெரியாது, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாது, அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளருக்கும் தெரியாது.

இப்படித் திட்டங்களை மாற்றி அமைக்கும் சூழலில் எதுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடத்த வேண்டும்? எதுக்கு அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள்? இந்த மாவட்டத்தில் பொறுப்பான ஒருவர் இல்லை என்றால், எதிர்காலத்தில் மட்டக்களப்பு மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதாக வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்