வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோபாலபுளியங்குளம் கிராமத்தில் 100 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஆணும் பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று(1) தெரிவித்தனர்.
பூவரசன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.