எல் நினோ நிலைமையின் தாக்கம் காரணமாக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் எதிர்பாராத பாதிப்பு ஏற்படலாம் என சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத விதமாக வறண்ட காலநிலை அதிகரிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியில் அசாதாரண காலநிலை நிலைகளை உருவாக்கும் எல் நினோ நிகழ்வு இம்முறை கடுமையான ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது உயர் வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த காலநிலை பயிர்ச் செய்கைக்கு கடுமையான பாதிப்புக்களை ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எல் நினோ நிலைமையால் பயிர்ச் செய்கைக்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைத்துக் கொள்வதற்கு விவசாய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்படுவது அவசியமாகும் எனவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.